இளம் நடிகருடன் காதலா? - கோட் நடிகை விளக்கம் | ஏஆர் ரஹ்மான் பிரிவுக்கும், மோகினி டே பிரிவுக்கும் சம்பந்தம் இல்லை: சாய்ரா பானு வழக்கறிஞர் விளக்கம் | என் மகளை மீட்டு தந்தது செட்டிக்குளங்கரா தேவி தான் : நயன்தாரா அம்மா உருக்கம் | மலையாள வாரிசு வில்லன் நடிகர் மேகநாதன் மறைவு | கிஸ் படத்திலிருந்து அனிரூத் விலகலா? | சம்பந்தி இது சரியில்லை : ‛ராஜாகிளி' பட விழாவில் அர்ஜூன் கலாட்டா | ராம் பொதினேனிக்கு ஜோடியான பாக்யஸ்ரீ போர்ஸ் | சிவகார்த்திகேயனுக்கு வில்லனா? மறுப்பு தெரிவித்த விஷால் | ஹாலிவுட் மியூசிக் மீடியா விருது: ஆடுஜீவிதம் பின்னணி இசைக்காக வென்றார் ஏ.ஆர்.ரஹ்மான் | விஜய் 69வது படத்தில் இணையும் வரலட்சுமி |
1988ம் ஆண்டு வெளிவந்த படம் 'வீடு மனைவி மக்கள்'. இயக்குனர் விசுவிடம் உதவியாளராக இருந்த டி.பி.கஜேந்திரன் இயக்கி இருந்தார். விசு, கே.ஆர்.விஜயா சீதா, எஸ்வி சேகர் உட்பட பலர் நடித்திருந்தனர். குரு காணிக்கையாக விசுவை இந்த படத்தில் கதையின் நாயகனாக நடிக்க வைத்தார் டிபி கஜேந்திரன்.
குடும்பத் தலைவரான விசு, தன் மகன்களின் வளர்ச்சிக்காக தனது பூர்வீக வீட்டையே விற்கிறார். பின்னர் மகன்கள் சம்பாதிக்க தொடங்கியதும் அவர்கள் உதவியுடன் புதிய வீடு ஒன்றை கட்டத் திட்டமிடுகிறார். ஆனால் அவர்கள் மறுத்து ஒதுங்கி விடுகிறார்கள். பின்னர் மனைவியின் ஒரே கனவான சொந்த வீடு கட்டும் பணியை தொடங்குகிறார். தனது சொந்த முயற்சியில் வீடு கட்டுகிறார்.
இந்த நேரத்தில் மனைவி இறந்துவிட அவரை அந்த புதிய வீட்டின் அருகிலேயே தகனம் செய்ய திட்டமிடுகிறார். இதனை கேள்விப்பட்ட மகன்கள் தாயைப் பார்க்க ஓடி வருகிறார்கள். ஆனால் அவர்கள் தாயை பார்க்க கூட அனுமதிக்காத விசு தனது கடைசி மகளான சீதாவை தாய்க்கு கொள்ளி வைக்க சொல்கிறார்.
இந்த கிளைமாக்ஸ் அப்போது பரபரப்பாக பேசப்பட்டது. இறந்தவர்களை சுடுகாட்டில் தான் தகனம் செய்ய வேண்டும் என்கிற மரபையும், மகன்கள் தான் கொள்ளி வைக்க வேண்டும் என்ற மரபையும் உடைத்து எறிந்த படம் இது. படம் பெரும் வெற்றி பெற்றது. பின்னர் இதே படம் கன்னடத்தில் தயாரானது. டிபி கஜேந்திரன் இயக்கினார். கே ஆர் விஜயா கேரக்டரில் ஊர்வசி சாரதா நடித்தார்.
25 படங்கள் வரை இயக்கி இருக்கும் டி.பி.கஜேந்திரனின் 73வது பிறந்த நாள் இன்று. அவர் இயக்கிய அனைத்து படங்களும் குடும்ப படங்கள். இரண்டு படங்கள் தவிர மற்ற அனைத்துமே வெற்றி படங்கள்.