Advertisement

சிறப்புச்செய்திகள்

2046ல் என்ன நடக்கும் ? ரஜிஷா விஜயனின் புதிய படம் பதில் சொல்லும் | ஆல்பம் பாடலில் அதிர வைக்கும் அழகுடன் மஞ்சு வாரியர் | ‛ஐ நோபடி' படப்பிடிப்பை நிறைவு செய்த பிரித்விராஜ் | ‛திரிஷ்யம் 3' கிளைமாக்ஸ் ஷாக்கிங் ஆக இருக்கும் : நடிகை ஆஷா சரத் | சம்பளத்துக்கு பதிலாக ஷேர் வாங்கும் அல்லு அர்ஜுன்! | மீண்டும் ஜிம்மில் ஒர்க்அவுட் செய்யும் வீடியோவை வெளியிட்ட திரிஷா! | 'வித் லவ்' படத்தின் வசூல் விவரம் குறித்து தகவல் இதோ! | தெலுங்கு படத்தை இயக்கும் 'மார்கோ' பட இயக்குனர்! | ஜி.வி. பிரகாஷூக்கு மாமாவாக நடிக்கும் வாய்ப்பை மிஸ் செய்த விஜய் ஆண்டனி! | இரண்டாவது முறையாக பாலிவுட் இளம் நடிகருடன் இணையும் ராஷ்மிகா! |

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

இந்தியாவே எனது வீடு : சர்ச்சைக்கு ஏஆர் ரஹ்மான் விளக்கம்

18 ஜன, 2026 - 06:46 IST
எழுத்தின் அளவு:
India-is-my-home-A.-R.-Rahmans-explanation-on-the-controversy
Advertisement

சென்னை : 'இந்தியனாக இருப்பதை ஆசிர்வதிக்கப்பட்டவனாக உணர்கிறேன் . இந்தியா எனது உத்வேகம், எனது ஆசிரியர் மற்றும் எனது வீடு' என இசையமைப்பாளர் ஏ . ஆர் . ரஹ்மான் கூறியுள்ளார்

பிரபல இசையமைப்பாளர் ஏ . ஆர் . ரஹ்மான் ஆங்கில சேனலுக்கு அளித்த பேட்டி ஒன்றில் , ' கடந்த எட்டு ஆண்டுகளாக , ஹிந்தி சினிமாவில் இருந்து எனக்கு வரும் வாய்ப்புகள் குறைந்துவிட்டன . சினிமாத்துறை சமூகம் சார்பானதாக மாறிவிட்டது . இசைத்துறையின் அதிகார கட்டமைப்பில் ஏற்பட்டுள்ள மாற்றம் இதற்கு காரணமாக இருக்கலாம் . படைப்பாற்றல் இல்லாதவர்களே அனைத்து முடிவுகளையும் தீர்மானிக்கும் சக்தியுடன் இருக்கின்றனர் . இது சமூகம் தொடர்பானதாகவும் இருக்கலாம்' எனவும் தெரிவித்து இருந்தார் . இந்த கருத்து கடும் விமர்சனத்துக்கு உள்ளானது . நடிகை கங்கனா ரணாவத் உள்ளிட்ட திரைப் பிரபலங்களே ஏ . ஆர் . ரஹ்மானை விமர்சிக்க துவங்கினர்

இந்நிலையில் சர்ச்சையான தனது கருத்து குறித்து விளக்கம் தெரிவித்து ஏ . ஆர் . ரஹ்மான் வீடியோ ஒன்றை வெளியிட்டு உள்ளார் . அதில் அவர் கூறியதாவது : ஒரு கலாசாரத்தை இணைப்பதற்கும் , கொண்டாடுவதற்கும் , கவுரவிப்பதற்கும் எப்போதும் எனது வழியாக , இசை இருந்து வருகிறது . இந்தியா எனது உத்வேகம் . எனது ஆசிரியர் மற்றும் எனது வீடு . சில நேரங்களில் நமது நோக்கங்கள் தவறாக புரிந்து கொள்ளப்படலாம் என்பதை நான் புரிந்து கொள்கிறேன் . ஆனால் , எப்போதும் இசையின் மூலம் கவுரவித்தல் மற்றும் சேவை செய்வதே எனது நோக்கம் ஆகும்

நான் ஒரு போதும் , யாரையும் புண்படுத்த விரும்பியதில்லை . எனது நேர்மை உணரப்படும் என்று நம்புகிறேன் . இந்தியனாக இருப்பதை ஆசிர்வதிக்கப்பட்டவனாக உணர்கிறேன் . இது , கருத்து சுதந்திரத்தை அனுமதிக்கும் மற்றும் பன்முக கலாசார குரல்களை கொண்டாடும் ஒரு இடத்தை உருவாக்க எனக்கு உதவுகிறது . இசை வாழ்க்கையின் ஒவ்வொரு பயணமும் எனது இலக்கை நிறைவேற்ற உதவுகிறது . இந்த நாட்டிற்கு நான் கடமைப்பட்டு இருப்பேன்

கடந்த காலத்தை மதிக்கும் , நிகழ்காலத்தைக் கொண்டாடும் மற்றும் எதிர்காலத்தை ஊக்குவிக்கும் இசைக்கு உறுதியளிக்கிறேன் . ஜெய் ஹிந்த் மற்றும் ஜெய் பாரத்.

இவ்வாறு அந்த வீடியோவில் ஏ . ஆர் . ரஹ்மான் கூறியுள்ளார் .

Advertisement
கருத்துகள் (1) கருத்தைப் பதிவு செய்ய
100 மில்லியன் பார்வைகளைக் கடந்த 'தளபதி கச்சேரி'100 மில்லியன் பார்வைகளைக் கடந்த ... 'கைதி 2' : கார்த்தி சொன்னதைச் செய்வாரா லோகேஷ் கனகராஜ் ? 'கைதி 2' : கார்த்தி சொன்னதைச் ...

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து (1)

Rock -  ( Posted via: Dinamalar Android App )
19 ஜன, 2026 - 03:01 Report Abuse
Rock Nee kelambi pakistan ooadu
Rate this:

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Na Na
    • நா நா
    • நடிகர் : சசிகுமார் ,சரத்குமார்
    • இயக்குனர் :NV நிர்மல்குமார்
    Tamil New Film Yang Mang Chang
    • எங் மங் சங்
    • நடிகர் : பிரபுதேவா
    • நடிகை : லட்சுமி மேனன்
    • இயக்குனர் :எம்எஸ் அர்ஜூன்
    Tamil New Film Kallapart
    • கள்ளபார்ட்
    • நடிகர் : அரவிந்த் சாமி
    • நடிகை : ரெஜினா
    • இயக்குனர் :ராஜபாண்டி
    Tamil New Film Party
    • பார்ட்டி
    • நடிகர் : ஜெய் ,சரத்குமார்,சந்திரன் (கயல்)
    • நடிகை : ரெஜினா ,நிவேதா பெத்ராஜ்
    • இயக்குனர் :வெங்கட் பிரபு
    dinamalar-advertisement-tariff

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2026 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in | Sitemap