ரூ.1.10 கோடி இழப்பீடு கேட்டு மாணவன் போட்ட வழக்கு : அமரன் பட செல்போன் எண் நீக்கம் | சூரி படத்தில் இணைந்த தனுஷ் பட நடிகை! | ஒரு உயிர் பலி : சிறப்புக் காட்சிகளை ரத்து செய்தது தெலங்கானா அரசு | புஷ்பா 2 - முதல்நாள் வசூல் முதல் கட்டத் தகவல் | டொவினோ தாமஸின் ‛ஐடென்டிடி' டீசர் வெளியானது | அரபு நாடுகளில் புஷ்பா 2 படத்தின் 19 நிமிட காட்சிகள் நீக்கம் | சுரேஷ் கோபி மகனுக்கு சண்டை சொல்லித்தரும் மம்முட்டி | புஷ்பா 2 - அமெரிக்காவில் முதல் நாளில் 4 மில்லியன் வசூல் | பெரிய பட்ஜெட், பெரிய ஹீரோ : தெலுங்கில் சாதிப்பாரா ஜோதி கிருஷ்ணா | இறுதிக்கட்டத்தில் 'திருவள்ளுவர்' படம் : இளையராஜா இசை |
சிவகார்த்திகேயனுடன் அடுத்தடுத்து டான், டாக்டர் என இரண்டு படங்களில் நடித்து பிரபலமானவர் நடிகை பிரியங்கா மோகன். இந்த வருடம் தமிழில் கேப்டன் மில்லர், சமீபத்தில் தெலுங்கில் வெளியான 'சரிபோத சனிவாரம்' உள்ளிட்ட படங்கள் இவரது நடிப்பில் ரிலீஸ் ஆகின. அடுத்ததாக இவர் ஜெயம் ரவிக்கு ஜோடியாக இவர் நடித்துள்ள பிரதர் திரைப்படம் வரும் தீபாவளிக்கு வெளியாக இருக்கிறது. இயக்குனர் எம். ராஜேஷ் இந்த படத்தை இயக்கியுள்ளார். இந்த படத்தின் புரமோஷன் நிகழ்ச்சிகளில் தொடர்ந்து கலந்து கொண்டு வருகிறார் பிரியங்கா மோகன்.
அதேசமயம் கடந்த சில நாட்களுக்கு முன்பு அதாவது சரிபோத சனிவாரம் படம் ரிலீசுக்கு முன்பாக அதன் புரமோஷன் நிகழ்ச்சிகளில் ஒரு முறை பிரியங்கா மோகன் பேசியபோது, குஷி படத்தின் இரண்டாம் பாகத்தை எடுத்தால் அதில் நடிக்க சரியான நபர் நடிகர் பவன் கல்யாண் மட்டுமே என்று கூறியிருந்தார். இதனால் கடுப்பான விஜய் ரசிகர்கள் அதற்கு முன்பே தமிழில் அந்த படத்தில் விஜய் தான் முதலில் நடித்திருந்தார் என்றும் பவன் கல்யாண் நடித்தது அதன் ரீமேக்கில் தான் என்றும் அது கூட பிரியங்கா மோகனுக்கு தெரியாதா என்றும் தங்களது கண்டனங்களை தெரிவித்து வந்தனர். இந்த நிலையில் சமீபத்தில் அளித்த பேட்டி ஒன்றில் இந்த கேள்வி கேட்கப்பட்ட போது இதற்கு விளக்கம் அளித்துள்ளார் பிரியங்கா மோகன்.
இது குறித்து அவர் கூறும்போது, “சரிபோத சனிவாரம் படத்தின் புரமோஷன் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட சமயத்தில் நான் அப்போது பவன் கல்யாணின் ஓஜி படத்தில் நடித்து வருவதால் அங்கே கூடியிருந்த ரசிகர்கள் ஓஜி குறித்து அப்டேட் சொல்லுமாறு உற்சாக கூச்சல் எழுப்பினார்கள். முதன்முறையாக குஷி படம் பார்த்தது பவன் கல்யாண் நடிப்பில் தான். அதன் பிறகு தான் எனக்கு அதில் விஜய் நடித்திருக்கிறார் என்பதே தெரியவந்தது. வந்தது அந்த படத்தில் இருந்து தான் பவன் கல்யாண் ரசிகையாக மாறினேன். அதுமட்டுமல்ல சரிபோத சனிவாரம் படத்தில் நடித்த போது அதில் வில்லனாக நடித்த எஸ்ஜே சூர்யா தான் குஷி படத்தை இயக்கியவர் என்பதால் அவருடன் இந்த படம் பற்றி பேசிக்கொண்டிருந்தபோது இதன் இரண்டாம் பாகம் பற்றியும் பேசினோம். அதை வைத்து தான் நான் அப்படி குறிப்பிட்டேனே, தவிர விஜய்யை எந்த விதத்திலும் குறைவாக பேசும் எண்ணம் இல்லை” என்று கூறி இந்த சர்ச்சைக்கு முற்றுப்புள்ளி வைத்துள்ளார்.