'கைதி 2' : கார்த்தி சொன்னதைச் செய்வாரா லோகேஷ் கனகராஜ் ? | இந்தியாவே எனது வீடு : சர்ச்சைக்கு ஏஆர் ரஹ்மான் விளக்கம் | 100 மில்லியன் பார்வைகளைக் கடந்த 'தளபதி கச்சேரி' | 2025ம் ஆண்டின் கடைசி வெற்றிப் படம் 'சிறை' - 25வது நாளில்… | வெகுளியாகப் பேசிவிட்டேன் : ஜீவா தந்த விளக்கம் | கவின் 9வது படத்தில் இணைந்த சாண்டி! | மீசைய முறுக்கு 2ம் பாகம்: அதிகாரப்பூர்வ அறிவிப்பு! | மகாராஜா இரண்டாம் பாகம் உருவாகிறது! | உறவினரை ஹீரோவாக மாற்றி அழகு பார்க்கும் கார்த்திக் சுப்பராஜ்! | மூன்றாவது முறையாக இணையும் சூர்யா, பாண்டிராஜ் கூட்டணி! |

தெலுங்கு சினிமாவில் முன்னணி நடிகையாக திகழும் ஸ்ரீ லீலா தமிழில் பராசக்தி படத்தில் நடிக்கிறார். ஹிந்தியில் கார்த்திக் ஆர்யனுக்கு ஜோடியாக ஆஷிகி 3 என்ற படத்தில் நடித்து வருகிறார். அனுராக் பாசு இயக்கும் இந்த படத்தின் படப்பிடிப்பு நடந்து வரும் நிலையில் சமீபத்தில் திரைக்கு வந்த சாயரா படத்தைப் போன்ற கதையில் உருவாகி இருப்பதாக பாலிவுட்டில் ஒரு செய்தி பரவி வருகிறது. அதாவது, சாயரா படத்தின் ஹீரோயினை போன்று இந்த ஆஷிகி 3 படத்தின் ஹீரோயினான ஸ்ரீ லீலாவும் ஒரு நோயால் பாதிக்கப்பட்ட வேடத்தில் நடிப்பதாக செய்தி பரவி வந்தது.
ஆனால் இந்த செய்தியை ஆஷிகி 3 படக்குழு மறுத்துள்ளது. அப்பட இயக்குனர் அனுராக் பாசு வெளியிட்டுள்ள செய்தியில், ‛‛சாயரா படம் போன்று ஆஷிகி 3 யும் காதல் கதையில்தான் உருவாகி இருக்கிறது. ஆனால் அந்த படத்தின் ஹீரோயினுக்கு இருப்பது போன்று இந்த படத்தின் ஹீரோயினுக்கு எந்த நோயும் இல்லை. அந்த படத்திற்கும், இந்த படத்திற்கும் துளி கூட சம்பந்தம் இருக்காது'' என்று கூறி அந்த பரபரப்புக்கு ஒரு முற்றுப்புள்ளி வைத்திருக்கிறார்.