எக்ஸாம் வெப்சீரிஸ் : சற்குணத்திற்கு துஷாரா தரும் ‛ஆபர்' | சூர்யாவின் கருப்பு பட சிறப்பு காட்சிக்கு தமிழகஅரசு அனுமதி | 'பெத்தி' படம் தெலுங்கு மார்க்கெட்டை பிடித்து தரும்: ஜான்வி கபூர் நம்பிக்கை | மே 14ல் நெட்பிளிக்சில் வெளியாகும் 'துரந்தர்-2' | ஏ.ஆர்.முருகதாஸ் சொன்ன அட்வைஸ் : இன்றைக்கும் கடைபிடிக்கிறாராம் ஜெய் | விஜய் முதல்வராக பொறுப்பேற்றுள்ளாரே, எப்படி பார்க்கிறீர்கள்? மீடியாக்கள் கேள்விக்கு ரஜினியின் ரியாக்சன்! | ரஜினி, கமலுக்கு நன்றி சொன்ன முதல்வர் விஜய் | 75 நாளில் 90 கோடி வசூலித்த ராதிகாவின் தாய் கிழவி! | அனில் ரவிபுடி படத்திற்கு இசையமைக்கும் ஜி.வி.பிரகாஷ் | பிளாஷ்பேக் : காணாமல் போன நல்லவள் |

கடந்த 10 வருடங்களாக மலையாள சினிமாவில் நடித்து வந்தாலும் குறைவான படங்களிலேயே நடித்திருக்கிறார் சானியா அய்யப்பன், குழந்தை நட்சத்திரமாக நடித்தவர் 'குயின்' படத்தின் மூலம் நாயகி ஆனார். அந்த படத்திற்காக நிறைய விருதுகள் பெற்றார். 'லூசிபர்' படத்தில் முக்கியமான கேரக்டரில் நடித்துள்ள அவர் தற்போது இரண்டாம் பாகத்திலும் நடித்து வருகிறார். இதுதவிர சல்யூட், சாட்டர்டே நைட், உள்பட பல படங்களில் நடித்துள்ளார்.
தமிழில் கடந்த ஆண்டு வெளியான 'இறுகப்பற்று' அந்தாலஜி படத்தில் ஒரு கதையில் நடித்திருந்தார். இந்த நிலையில் தற்போது ஆர்.ஜே.பாலாஜி நடித்துள்ள 'சொர்க்கவாசல்' படத்தில் நாயகியாக நடித்துள்ளார். ஸ்வைப் ரைட் ஸ்டுடியோஸ் மற்றும் திங்க் ஸ்டூடியோஸ் இந்த படத்தை தயாரிக்கிறது. பா.ரஞ்சித்திடம் உதவி இயக்குனராக பணியாற்றிய சித்தார்த் விஸ்வநாத் இயக்குகிறார்.
சிறையை பின்னணியாகக் கொண்டு உருவாகும் இத்திரைப்படத்தில் இயக்குநர் செல்வராகவன், நட்டி, ஷரப் உதீன் மற்றும் ஹக்கீம் ஷா, இயக்குநர் பாலாஜி சக்திவேல், கருணாஸ், ரவி ராகவேந்திரா, அந்தோணி தாசன், சாமுவேல் ராபின்சன் மற்றும் மெளரிஷ் ஆகியோர் நடிக்கிறார்கள்.
படத்தின் கதையை தமிழ்ப்பிரபா மற்றும் அஷ்வின் ரவிச்சந்திரன் ஆகியோருடன் இணைந்து இயக்குநர் சித்தார்த் விஸ்வநாத் எழுதியுள்ளார். மம்முட்டி நடித்த 'பிரம்மயுகம்' படத்திற்கு இசையமைத்த கிறிஸ்டோ சேவியர் இந்தப்படத்தின் மூலம் தமிழில் அறிமுகம் ஆகிறார். ஒளிப்பதிவை பிரின்ஸ் ஆண்டர்சன் ஒளிப்பதிவு செய்கிறார். சிறை வாழ்க்கையை பின்னணியாக கொண்டு உருவாகும் இந்த படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்து போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் நடைபெற்று வருகின்றன.




