சமந்தாவுக்கு விலை உயர்ந்த திருமண பரிசு கொடுத்த ராஜ் நிடிமொரு | ‛கோழிப்பண்ணை செல்லத்துரை' நாயகனின் அடுத்த படம் ‛ஹைக்கூ' | அஜித்தின் கார் ரேஸை ஆவண படமாக்கும் ஏ.எல்.விஜய் | லண்டன் லெஸ்டர் சதுக்கத்தில் ஷாருக்கான், கஜோலுக்கு சிலை | ரஜினி படத்திற்கு இசையமைக்கும் சாய் அபயன்கர் | ரவி தேஜா,பிரியா பவானி சங்கர் படத்தின் தலைப்பு இருமுடி? | பராசக்தி படத்தின் இசை வெளியீட்டு விழா எங்கே? | அரசன் படத்தின் படப்பிடிப்பு பற்றிய புதிய அப்டேட் | பாலகிருஷ்ணாவின் 'அகண்டா 2' தள்ளிப் போனது ஏன் ? | 100 கோடி வசூல் கடந்த தனுஷின் 'தேரே இஷ்க் மெய்ன்' |

இலங்கையில் உள்நாட்டு போர் முடிவுக்கு வந்த பிறகு அங்குள்ள தமிழ் மக்களின் வாழ்க்கை சூழ்நிலை எப்படி இருக்கிறது என்பதை மையமாக கொண்டு உருவாகி உள்ள படம் 'ஒற்றைப் பனை மரம்'. சில ஆண்டுகளுக்கு முன்பே தயாராகிவிட்ட இந்த படம் 40க்கும் மேற்பட்ட சர்வதேச திரைப்பட விழாக்களில் திரையிடப்பட்டு 17 விருதுகளை பெற்றுள்ளது.
''மண்” பட இயக்குனர் புதியவன் ராசையா நடித்து இயக்கி உள்ளார். நவயுகா, அஜாதிகா புதியவன், மாணிக்கம் ஜெகன், தனுவன் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். மகிந்த அபேசிங்க ஒளிப்பதிவு செய்துள்ளார். அக்ஷயா இசை அமைத்துள்ளார். படம் வருகிற 25ம் தேதி தியேட்டர்களில் வெளியாகிறது.
படம் பற்றி இயக்குனர் புதியவன் ராசய்யா கூறும்போது, “இலங்கையில் உள்நாட்டு போர் முடிவுறும் இறுதிநாட்களில் ஆரம்பிக்கும் இக்கதை, சமகால சூழலில் முன்னாள் போராளிகளும் மக்களும் சந்தித்துக் கொண்டிருக்கும் சொல்லத் துணியாத கருவை தெள்ளத் தெளிவாக நகர்த்தும் கதையாக 'ஒற்றைப் பனை மரம்' உருவாகியுள்ளது. யதார்த்த நடிப்பு, இயல்பான காட்சியமைப்பு, இதயத்தை கனத்துப்போக வைக்கும் திருப்பங்கள் என கதைக்குள் அழைத்துச் சென்று, ஈழத்தில், கிளிநொச்சியிலுள்ள கிராமத்தில் பார்வையாளர்களை கொண்டு சேர்க்கும்.உண்மைச் சம்பவங்களின் அடிப்படையில் உருவாகியிருக்கும் படம்” என்றார்.




