தொடர்ந்து குத்து பாடல் வாய்ப்பு - மறுக்கும் தமன்னா | உண்மையிலேயே பஹத் பாசிலுக்கு தான் அந்த தைரியம் உண்டு : நடிகை ஊர்வசி புகழாரம் | கமலுக்கான கதையை மோகன்லால் - மம்முட்டி படத்திற்கு பயன்படுத்தவில்லை : இயக்குனர் விளக்கம் | மூன்றாவது முறையாக ஜோடி சேரும் விஜய் தேவரகொண்டா, ராஷ்மிகா | பெஞ்சல் புயல் : ரூ.10 லட்சம் நிவாரண நிதி வழங்கிய சிவகார்த்திகேயன் | சூர்யா 45வது பட படப்பிடிப்பில் இணைந்தார் த்ரிஷா | இயக்குனர் அவதாரம் எடுக்கும் சந்தானம் | 'ஒரு பெண் போல சண்டை செய்' - சமந்தாவின் பதிவு யாருக்காக? | தமிழகத்தில் ஒரு கோடி பேர் பார்த்த 'அமரன்' | புஷ்பா 2 பட குழுவுக்கு நன்றி தெரிவித்த சாம் சி.எஸ் |
கேரளாவை சேர்ந்தவர் வர்ஷா விஸ்வநாத். மாடலிங் துறையில் இருந்த இவர் பல விளம்பர படங்களில் நடித்துள்ளார். 'பதினெட்டாம் நூற்றாண்டு' என்ற மலையாள படத்தின் மூலம் அறிமுகமான இவர் அதன்பிறகு 'ரெட்டி கரின்டலோ ரவுடியிசம்', 'ஹட்டு லேது ரா' உள்ளிட்ட சில தெலுங்கு படங்களில் நடித்துள்ளார். இந்த நிலையில் நடிகர் கிருஷ்ணாவின் 23வது படத்தின் மூலம் தமிழுக்கு வருகிறார்.
தயாரிப்பாளர் பட்டியல் சேகரின் மகனும், இயக்குனர் விஷ்ணுவர்த்தனின் தம்பியுமான கிருஷ்ணா, 'அலிபாபா' என்ற படத்தின் மூலம் நாயகனாக அநிமுகமானார். அதன் பிறகு கற்றது களவு, கழுகு, வல்லினம், யாமிருக்க பயமேன், வன்மம், வானவராயன் வல்லவராயன், பண்டிகை, யாக்கை, யட்சன் படங்களில் நடித்தார். கடைசியாக கவுதம் மேனன் இயக்கிய 'ஜோஸ்வா இமைபோல் காக்க' படத்தில் வில்லனாக நடித்தார். தற்போது அவர் நடிக்கும் 23வது படம் தொடங்கபட்டுள்ளது. படத்திற்கு இன்னும் டைட்டில் வைக்கவில்லை. நாகார்ஜூன் ஒளிப்பதிவு செய்கிறார், சாம் சி.எஸ் இசை அமைக்கிறார். இந்த படத்தை டான் கிரியேசன்ஸ் சார்பில் எல்.கணேஷ் தயாரிக்கிறார். அறிமுக இயக்குனர் அப்பாத்துரை பாரதிராஜா இயக்குகிறார்.
“கிராமத்துக்கதையாக உருவாகவிருக்கும் இந்தப்படம் திருச்சி மற்றும் மதுரை புறநகர் பகுதிகளில் படப்பிடிப்பு நடைபெறுகிறது. சஸ்பென்ஸ் மற்றும் ஆக்ஷன் நிறைந்த கமர்சியல் படமாக அனைவரும் ரசிக்கும் படமாக இருக்கும்” என்கிறார் படத்தின் இயக்குனர் அப்பாத்துரை பாரதிராஜா.