எமர்ஜென்சி படத்திற்கு பஞ்சாபில் தடை : கங்கனா கோபம் | 'விடாமுயற்சி' ரீமேக் உரிமை சிக்கலுக்குத் தீர்வு | ஷங்கருக்கு ஆதரவாகப் பேசினாரா தமன்? | ரசிகர்கள் கல் எறிய மாட்டார்கள் என நம்புகிறேன் : விஷால் | விரைவில் திரைக்கு வரும் தினேஷின் கருப்பு பல்சர் | விஜயகாந்த் படத்தின் தலைப்பில் நடிக்கிறாரா தனுஷ்? | சமரச பேச்சுவார்த்தை - ரவி மோகன், ஆர்த்தியின் விவாகரத்து வழக்கு தள்ளிவைப்பு | ரஜினியின் ஜெயிலர் 2 அறிமுக டீசரின் மேக்கிங் வீடியோ வெளியானது | இயக்குனர், தயாரிப்பாளர் ஜெயமுருகன் காலமானார் | விவசாயத்தின் முக்கியத்துவம் பேசும் 'மருதம்' |
ஒரு சில நடிகைகள் மட்டுமே பிரபல நாவல் கதைகளில் நடித்துள்ளனர். லட்சுமி, சாரதா, சரிதா இப்படி ஒரு சில நடிகைகளை குறிப்பிடலாம். ஜெயலலிதாவும் ஒரு சில நாவல்கதைகளில் நடித்துள்ளார். அவற்றில் முக்கியமானது 'நதியை தேடி வந்த கடல்'. பிரபல எழுத்தாளர் மகரிஷி எழுதிய நாவல் அதே தலைப்பில் படமானது.
இதில் ஜெயலலிதாவுக்கு ஜோடியாக சரத்பாபு நடித்திருந்தார். படாபட் ஜெயலட்சுமி. ஸ்ரீகாந்த், மாஸ்டர் சேகர், ஜமீலா உள்ளிட்ட பலர் நடித்திருந்தார்கள். இளையராஜா இசை அமைத்திருந்தார். பஞ்சு அருணாசலம் வசனம் எழுதியிருந்தார். முன்னணி எடிட்டரான பி.லெனின் இயக்கி இருந்தார்.
இந்த படத்திற்கு முன்பு ஜெயலலிதா நடித்த 'மாற்றான் தோட்டத்து மல்லிகை', 'மணிப்பூர் மாமியார்' படங்கள் வெளியாகவில்லை. அதனால் இதுவே ஜெயலலிதாவுக்கு கடைசி படமானது. இந்த படத்திற்கு இளையராஜா இசை அமைத்திருந்தார். 'தவிக்குது தவிக்குது ஒரு மனது..' என்ற பாடல் இப்போதும் தேன் சொட்டும் பாடலாக ரசிக்கப்படுகிறது. அதில் ஜெயலலிதா ஆடியிருக்கும் நடனமும் மனதை கொள்ளை கொள்ளும்.