தி ராஜா சாப் படத்தில் பைரவி ஆக மாளவிகா மோகனன் | தயாரிப்பாளரை நடிகராக மாற்றும் பாண்டிராஜ் | வார் 2 படத்தால் நஷ்டமா... : தயாரிப்பாளர் விளக்கம் | ஷங்கர் மகனுக்கு ஜோடியாகும் இளம் நாயகி | குருநாதருக்கு நன்றி செலுத்தும் மிஷ்கின் | அடுத்த ஆண்டாவது ஒலிக்குமா என் இனிய தமிழ் மக்களே | கூலி படத்துக்கு விமர்சனம் : மவுனம் கலைத்த லோகேஷ் கனகராஜ் | தனுஷை தொடர்ந்து கார்த்தியை இயக்கும் எச்.வினோத்? | 'புஷ்பா-2' சாதனையை முறியடித்த ரன்வீர் சிங்கின் 'துரந்தர்' | விஜய் அரசியலுக்கு வருவது சமூகத்தின் மீதான அக்கரையை காட்டுகிறது!- சொல்கிறார் கன்னட நடிகர் சுதீப் |

ஜிகர்தண்டா டபுள் எக்ஸ் படத்தின் வெற்றிக்குப் பிறகு இயக்குனர் கார்த்திக் சுப்புராஜ் தற்போது நடிகர் சூர்யாவின் 44வது படத்தை இயக்கி உள்ளார்.
இதில் பூஜா ஹெக்டே, ஜெயராம், ஜோஜூ ஜார்ஜ், கருணாகரன், சுஜித் ஷங்கர், பிரகாஷ் ராஜ் உள்ளிட்டோர் இணைந்து நடித்துள்ளனர்.
இதன் படப்பிடிப்பை அந்தமான், கேரளா, மூணார்,சென்னை ஆகிய பகுதிகளில் நடத்தி வந்தனர். சமீபத்தில் இதன் முழு படப்பிடிப்பும் நிறைவு பெற்றது.
கார்த்திக் சுப்புராஜ் அளித்த பேட்டி ஒன்றில், " சூர்யா 44வது படமாக கேங்க்ஸ்டர் படம் என கூறப்படுகிறது. ஆனால், சூர்யா 44 படம் ஒரு அழகான காதல் கதை. அதில் ஆக்ஷன் காட்சிகள் உள்ளது. சூர்யா, பூஜா ஹெக்டே சம்மந்தப்பட்ட காதல் காட்சிகள் ரசிக்கும்படியாக உருவாக்கியுள்ளது. இப்படம் 2025ம் ஆண்டு கோடையில் திரைக்கு வருவதற்கான போஸ்ட் புரொடக்ஷன் பணி நடைபெற்று வருகிறது" என தெரிவித்துள்ளார்.