ரஜினியின் 'ஜெயிலர்-2' படத்தில் இணைந்த ஹிந்தி நடிகை அபேக்ஷா போர்வல்! | 15 கிலோ எடை குறைத்த கிரேஸ் ஆண்டனி! | கோவா சர்வதேச திரைப்பட விழாவில் திரையிடப்படும் அமரன்! | சூர்யாவின் 'கருப்பு' படத்தின் கிளைமாக்ஸை மாற்றும் ஆர்.ஜே.பாலாஜி! | விக்னேஷ் சிவனை தொடர்ந்து ரோல்ஸ் ராய்ஸ் ஸ்பெக்டர் எலக்ட்ரிக் கார் வாங்கிய அட்லி! | 'பைசன் முதல் தி ஜூராசிக் வேர்ல்ட்' வரை..... இந்த வார ஓடிடி ரிலீஸ்..! | 'தி பேமிலி மேன் 3' ரிலீஸ்: பதட்டமாகவும், சந்தோஷமாகவும் இருக்கு: மனோஜ் பாஜ்பாய் | என் பெயரில் வரும் அழைப்புகள், மெசேஜ்கள் போலியானவை: தனுஷ் மானேஜர் அறிக்கை | பெண்களை இழிவாக பேசும் இயக்குனர்: திவ்யபாரதி புகார் | 'ஆரோமலே' படத்திற்கு எதிராக வழக்கு |

ராஜூ முருகன் இயக்கத்தில் ‛ஜோக்கர்' படம் மூலம் பிரபலமானவர் நடிகை ரம்யா பாண்டியன். தொடர்ந்து ஆண் தேவதை உள்ளிட்ட சில படங்களில் நடித்தார். பிக்பாஸ், குக் வித் கோமாளி போன்ற டிவி நிகழ்ச்சிகள் மூலம் இன்னும் பிரபலமானார். அதைவிட அவர் வெளியிடும் மொட்டை மாடி மற்றும் விதவிதமான போட்டோஷூட்டிற்கு ஏகப்பட்ட ரசிகர்கள் உள்ளனர்.
இந்நிலையில் சத்தமின்றி இவருக்கு திருமணம் முடிவாகி உள்ளது. ரம்யா பாண்டியன் கடந்தாண்டு பெங்களூரில் வாழும் கலை ரவி சங்கர் ஆஸ்ரமத்தில் இயங்கி வரும் யோகா பயிற்சி மையத்தில் இணைந்தார். அங்கு யோகா பயிற்சி செய்தவர் அவருக்கு அங்கு யோகா மாஸ்டராக இருந்த லோவெல் தவான் என்பவருடன் பழக்கமானது. இவர்களின் காதல் இப்போது திருமணத்திற்கு வந்துள்ளது.
மணமகன் லோவெல் தவான் பஞ்சாப் லூத்தியானவில் பல இடங்களில் செயல்பட்டு வரும் பப்ளிக் லேபராட்டிரீஸின் உரிமையாளராகவும் இருந்து வருகிறார். இவர்களது திருமணம் ரிஷிகேஷில் கங்கை நதி பாயும் கோயிலின் அருகே நடைபெற உள்ளது.
ரம்யா பாண்டியன் திருநெல்வேலியை பூர்வீகமாக கொண்டவர். இவரது தந்தை துரை பாண்டியன் மறைந்துவிட்டார். தாய் சாந்தி, சகோதரி திரிபுர சுந்தரி (பேஷன் டிசைனர்) மற்றும் தம்பி பரசுராமன். பிலிம் டெக்னாலஜி படித்து விட்டு துபாயில் ஒரு நிறுவனத்தில் பணி புரிந்து வருகிறார்.
இவர்களின் திருமணம் அடுத்தமாதம் நவ., 8ல் நடைபெற உள்ளதாகவும், திருமண வரவேற்பு நவ., 15ல் சென்னையில் நடப்பதாகவும் தகவல் வெளியாகி உள்ளது.




