டிவி நிகழ்ச்சியில் சவுந்தர்யாவை நினைத்து கண் கலங்கிய ரம்யா கிருஷ்ணன் | மீண்டும் பாலகிருஷ்ணா ஜோடியாக நயன்தாரா நடிப்பது ஏன் | ‛டூரிஸ்ட் பேமிலி' இயக்குனருக்கு பிஎம்டபுள்யூ கார் பரிசு | மாதவன், கங்கனா படத்தின் தலைப்பு என்ன தெரியுமா? | என் துயரத்தை சிலர் கொண்டாடினர் : சமந்தா | போலீஸ் வேடத்தில் சசிகுமார் | 64வது படத்தில் நடிக்க சம்பளத்தை உயர்த்தினாரா அஜித்குமார்? | தமிழ் புத்தாண்டில் சூர்யா-சிம்பு மோதிக்கொள்கிறார்களா? | 'மா இண்டி பங்காரம்' படத்திற்காக தீவிர ஒர்க் அவுட்டில் இறங்கிய சமந்தா! | விஜய் ஆண்டனியின் 'சக்தி திருமகன்' படத்தை பாராட்டிய இயக்குனர் ஷங்கர்! |

சில வாரங்களுக்கு முன்பு கேரளாவில் வெளியான நீதிபதி ஹேமா கமிஷன் அறிக்கை மலையாள திரையுலகில் நடிகைகள் பலர் பாலியல் ரீதியாக சந்திக்கும் தொந்தரவுகள் குறித்து வெளிச்சம் போட்டி காட்டியது. இதைத் தொடர்ந்து நடிகைகள் பலரும் திரையுலகில் பிரபலமாக இருக்கும் நடிகர்கள், இயக்குனர்கள் மீது பாலியல் குற்றச்சாட்டு புகார்களை கூறி வருகின்றனர்.
அந்த வகையில் நடிகை ஒருவர், பிரபல குணசித்திர மற்றும் வில்லன் நடிகர் ஆன நடிகர் சித்திக் மீது திருவனந்தபுரம் காவல் நிலையத்தில் புகார் அளித்திருந்தார். கேரள நீதிமன்றம் அவருக்கு முன் ஜாமீன் வழங்க மறுத்த நிலையில் சில நாட்கள் தலைமறைவாக இருந்த சித்திக் உச்ச நீதிமன்றத்தை நாடி தன்னை கைது செய்வதற்கான இடைக்கால தடை உத்தரவை பெற்றார்.
அதேசமயம் உச்சநீதிமன்றம் போலீஸ் விசாரணைக்கு சித்திக் ஒத்துழைக்க வேண்டும் என்றும் உத்தரவிட்டிருந்தது. இதனை தொடர்ந்து தற்போது சித்திக்கிடம் போலீசார் இந்த வழக்கு குறித்து விசாரித்து வருகின்றனர். இரண்டு நாட்களாக நடந்த இந்த விசாரணையின்போது பெரும்பாலும் சித்திக் எந்த கேள்வி கேட்டாலும் தனக்குத் தெரியாது அல்லது ஞாபகம் இல்லை என்பது போல திருப்பித் திருப்பி பதில்களை கூறி வருகிறாராம். இதனால் போலீசார் அவர் விசாரணைக்கு ஒத்துழைக்க மறுப்பதாக கூறி அவரது ஜாமீனை ரத்து செய்து அவரை கைது செய்து விசாரிக்கவும் திட்டமிட்டுள்ளார்கள் என்று போலீசார் தரப்பில் செய்தி வெளியாகி உள்ளது.