ராம் பொதினேனிக்கு ஜோடியான பாக்யஸ்ரீ போர்ஸ் | சிவகார்த்திகேயனுக்கு வில்லனா? மறுப்பு தெரிவித்த விஷால் | ஹாலிவுட் மியூசிக் மீடியா விருது: ஆடுஜீவிதம் பின்னணி இசைக்காக வென்றார் ஏ.ஆர்.ரஹ்மான் | விஜய் 69வது படத்தில் இணையும் வரலட்சுமி | 73வது பிறந்தநாளை கொண்டாடிய இசையமைப்பாளர் தேவா! | விடாமுயற்சி படத்தின் சிறு பிஜிஎம் வைரல் | சோளிங்கர் லட்சுமி நரசிம்மர் கோவிலில் சூர்யா - சிவா வழிபாடு | விவாகரத்து வழக்கு ; தனுஷ் - ஐஸ்வர்யா நேரில் ஆஜர் : பிரிவதில் இருவரும் உறுதி | விமர்சனங்கள், தியேட்டர் கருத்துக்கள்…தடுக்க முடியுமா? | ஏ.ஆர்.ரஹ்மான் குழுவிலிருந்த பெண் 'கிடாரிஸ்ட்' விவாகரத்து |
தமிழில் மிஷ்கின் இயக்கிய பிசாசு படத்தின் மூலம் அறிமுகமானவர் மலையாள நடிகை பிரயாகா மார்டின். கடந்த சில நாட்களுக்கு முன்பு கேரளாவில் பிரபல தாதா ஓம்பிரகாஷ் என்பவர் போதைப் பொருட்கள் கடத்தல் தொடர்பான வழக்கில் ஒரு ஹோட்டலில் தங்கியிருந்த போது கைது செய்யப்பட்டார். அவர் அந்த ஹோட்டலில் தங்கியிருந்த நாட்களில் ஒரு பார்ட்டி நடந்ததாகவும் அதில் பிரயாகா கலந்து கொண்டதாகவும் அங்குள்ள சிசிடிவி கேமராக்களை ஆய்வு செய்த போலீசார் கண்டுபிடித்தனர்.
இது குறித்து பிரயாகாவிடமும் விசாரணை நடைபெற்றது. அதேசமயம் இப்படி ஒரு குற்றச்சாட்டு தன் மீது விழுந்ததுமே அது குறித்து விளக்கம் அளித்த பிரயாகா மார்டின், “அந்த ஹோட்டலில் நடந்த பார்ட்டியில் நான் கலந்து கொண்டது உண்மைதான். ஆனால் அது எனது நண்பர்கள் ஏற்பாடு செய்திருந்த பிறந்தநாள் பார்ட்டி. அதில் தான் கலந்து கொண்டேன், அதன் பிறகு அங்கிருந்து வெளியூர் பயணம் மேற்கொள்ள வேண்டி இருந்ததால் அந்த ஹோட்டலில் இரண்டு மணி நேரம் தங்கியிருந்து பின் கிளம்பி சென்றேன். ஆனால் அந்த ஹோட்டலில் இப்படி ஒரு தாதா தங்கி இருந்தார் என்பதோ அவர் பெயர் கூடவோ எனக்கு தெரியாது'' என்று கூறியிருந்தார்.
இந்த நிலையில் போலீசார் விசாரணையில் பிரயாகா மார்ட்டின் கூறியது உண்மைதான் என்று உறுதியாகி அவர் இந்த விசாரணை வளையத்தில் இருந்து விடுவிக்கப்பட்டுள்ளதாக செய்தி வெளியாகியுள்ளது. இதன் பின்னணியில் பிரயாகாவுக்கு பக்கபலமாக நின்று சட்டரீதியான உதவிகளை செய்து கொடுத்தவர் மலையாள வில்லன் நடிகரான சாபுமோன் அப்துசமது தான். இவர் சமீபத்தில் வெளியான வேட்டையன் படத்தில் ஆரம்ப காட்சிகளிலேயே போலீஸ் அதிகாரியான ரஜினிகாந்த்தால் என்கவுன்டரில் சுடப்பட்டு பலியாகும் ஒரு சிறிய தாதா கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.
இவர் பிரயாகா மார்டினுக்கு தான் செய்த உதவி பற்றி கூறும்போது, “பிரயாகா என்னுடைய நீண்ட நாள் குடும்ப நண்பர். இப்படி ஒரு சிக்கலில் அவர் சிக்கி உள்ளார் என்று தெரிந்தபோது நம் மீது தவறு இல்லை என்றால் நாம் எங்கும் ஓடி ஒளியக்கூடாது தைரியமாக மீடியாவை எதிர்கொள்ள வேண்டும் என அவரிடம் கூறினேன். அது மட்டுமல்ல பல பேர் இந்த வழக்கில் எனக்கு உதவி செய்ய தயங்கியதுடன் என் குடும்ப உறவினர்களும் நண்பர்களும் கூட உனக்கு எதற்கு இந்த வேண்டாத வேலை என்று அறிவுரையும் கூற துவங்கினார்கள். ஆனாலும் சில நல்ல மனம் கொண்ட வழக்கறிஞர்கள் ஆலோசனையுடன் பிரயாகாவிற்கு என்னால் உதவி செய்ய முடிந்தது. தற்போது அவர் அந்த வழக்கு சர்ச்சையில் இருந்து சட்ட உதவியுடன் வெளிவரவும் முடிந்தது” என்று கூறியுள்ளார்.