குட் பேட் அக்லி படத்தின் டிரைலர் அப்டேட் | ஸ்ருதி நாராயணனின் இன்ஸ்டா பதிவு | சிக்கந்தர் - மோசமில்லாத முதல் நாள் வசூல் | மாஸ்க், தொப்பி அணிந்தபடி டேட்டிங் செல்லும் விஜய்தேவர கொண்டா - ராஷ்மிகா | ரிலீஸிற்கு முன்பே பார்த்திருந்தால் மோகன்லால் அனுமதித்திருக்க மாட்டார் : மேஜர் ரவி கருத்து | தல வருகிறார், அவரை பாருங்கள் : அருண் விஜய் வெளியிட்ட பதிவு | ஏற்றி விட்ட ஏணியை மறந்து போன நடிகர்கள் : பாவமில்லையா பாரதிராஜா...! | மேலிடத்து உத்தரவு... கால்ஷீட் தராத தனுஷ் : தயாரிப்பாளர் குற்றச்சாட்டு | கண்ணப்பா ரிலீஸ் தள்ளிப்போனது : காரணம் இது தான் | விஷாலுக்கு ஜோடியாகும் துஷாரா விஜயன் |
சமீபத்தில் மலையாள திரை உலகை சேர்ந்த பல நடிகைகள் நீதிபதி ஹேமா கமிஷன் அறிக்கை வெளியானதை தொடர்ந்து பிரபல நடிகர்களிடம் பல வருடங்களுக்கு முன்பு தாங்கள் எதிர்கொண்ட பாலியல் தொந்தரவுகள் குறித்து வெளிப்படையாக கூறி வருவதுடன் காவல் துறையிலும் புகார் அளித்து வருகின்றனர்.
அப்படி கூறியவர்களில் ஒரு நடிகை மட்டும் நடிகர்கள் சித்திக், ஜெயசூர்யா உள்ளிட்ட பல நடிகர்கள் மீது குற்றச்சாட்டுகளை சுமத்தி இருந்தார். இதனால் அவர்கள் மீது போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். நடிகைகளின் இந்த குற்றச்சாட்டுகளுக்கும் புகார்களுக்கும் பலர் ஆதரவாக குரல் கொடுத்தாலும் ஒரு சிலர் இது பழிவாங்கும் நடவடிக்கை என்றும், வாய்ப்புகள் வேண்டாம் என்றால் நாம் தான் ஒதுங்கி செல்ல வேண்டும் அதற்கு இணங்கி செல்லக்கூடாது என்பது போன்று எதிர்மறையாகவும் விமர்சனங்களை கூறி வருகின்றனர்.
குறிப்பாக திரையுலகத்தில் இருந்தே இதுபோன்று எதிர்ப்பு குரல் ஒலிக்கிறது என்றால் ஆச்சரியம் தான். இந்த வகையில் சமீபத்தில் வெளியான லப்பர் பந்து படம் மூலம் மீண்டும் வெளிச்சத்திற்கு வந்துள்ள மலையாள நடிகை சுவாசிகா மற்றும் நடிகை பீனா ஆண்டனி, நடிகர் மனோஜ் ஆகிய மூவரும் ஒரு யூடியூப் சேனல் ஒன்றில் அளித்த பேட்டியின் போது சம்பந்தப்பட்ட சில நடிகைகளின் புகார் குறித்தும் அவர்களது செயல்கள் குறித்தும் விமர்சிக்கும் விதமாக பேசி உள்ளனர். இதனை தொடர்ந்து இவர்கள் பெண்களின் மாண்பை இழிவு படுத்துகின்றனர் என்று கூறி ஏற்கனவே நடிகர்கள் மீது புகார் அளித்த அதே நடிகை இவர்கள் மூவரின் மீதும் போலீசில் புகார் செய்துள்ளார். இதனைத் தொடர்ந்து பெண்களை அவதூறாக பேசுதல் என்கிற வழக்கில் இவர்கள் மூவர் மீதும் பதிவு செய்யப்பட்டுள்ளது.