சூர்யவம்சம் 2ம் பாகம் உருவாகிறது? | தமிழில் அறிமுகமாகும் ராப் பாடகர் வேடன் | உடலை வருத்தும் சிம்பு | தனுஷ் பிறந்தநாளில் புதுப்பொலிவுடன் ரீ-ரிலீஸ் ஆகும் ‛புதுப்பேட்டை' | ஸ்டன்ட் காட்சியில் ஒருவர் உயிரிழப்பு : இயக்குனர் பா.ரஞ்சித் மீது வழக்கு பதிவு | ரஜினி ரசிகர்களுக்கு நேற்று முக்கியமான நாள் : அப்படி என்ன சிறப்பு தெரியுமா? | மகன் மீதான தாக்குதல் : மறைமுகமாக பதிலடி கொடுத்த விஜய்சேதுதி | அடுத்தடுத்து 3 படங்கள்... சம்பளம் 100 கோடி : சிவகார்த்திகேயன் மார்க்கெட் விரிவடைகிறது | ஜுலை 18ல் இத்தனை படங்கள் வெளியீடா….??? | மலேசியாவில் இருந்து சென்னை திரும்பினார் பாரதிராஜா : பாராட்டு விழா எப்போது? |
2023ம் ஆண்டில் பெரும் வெற்றியைப் பெற்ற ஹிந்தி படமாக 'ஜவான்' படம் இருந்தது. 1000 கோடிக்கும் அதிகமான வசூலைக் குவித்த படத்தை அட்லி இயக்க அனிருத் இசையமைக்க ஷாரூக்கான், நயன்தாரா, விஜய் சேதுபதி மற்றும் பலர் நடித்திருந்தனர். அப்படத்தின் வரவேற்புக்கு அனிருத் இசையும் ஒரு முக்கிய காரணமாக அமைந்தது. பாடல்களும், பின்னணி இசையும் ஹிந்தி ரசிகர்களால் பெரிதும் ரசிக்கப்பட்டது.
படத்தின் வெற்றிக்குக் காரணமான அனிருத்தை சமயம் கிடைக்கும் போதெல்லாம் பாராட்டி மகிழ்ந்தார் ஷாரூக்கான். தனது அடுத்த படத்திற்கும் அனிருத்தையே ஷாரூக் சிபாரிசு செய்துள்ளதாக ஒரு தகவல் வெளியாகி உள்ளது. சுஜாய் கோஷ் இயக்க உள்ள 'கிங்' படத்தில் அடுத்து ஷாரூக்கான் நடிக்க உள்ளார். அப்படத்திற்கு இசையமைக்கும் வாய்ப்பை அனிருத் பெற்றுவிட்டார் என்ற தகவல் வெளியாகி உள்ளது.
இப்படத்தில் ஷாரூக் மகள் சுஹானா கான் முக்கிய கதாபாத்திரத்திலும், அபிஷேக் பச்சன் வில்லன் கதாபாத்திரத்திலும் நடிக்க உள்ளார்களாம். கடந்த சில மாதங்களாகவே இப்படத்திற்கான முன் தயாரிப்புப் பணிகள் நடந்து வருகின்றன. அடுத்த ஆண்டு துவக்கத்தில் இப்படத்தின் படப்பிடிப்பு ஆரம்பமாகும் எனத் தெரிகிறது.