பிளாஷ்பேக்: எம்ஜிஆரின் நிறைவேறாத கனவு | காதலர் பிரிவுக்கு பின் மீண்டும் சினிமாவில் முழு வேகத்தில் தமன்னா | மகன் படத்தில் விஜய் சேதுபதி நடிக்கிறாரா | விஜய் ஆண்டனியின் அடுத்த எதிர்பார்ப்பு ‛சக்தி திருமகன்' | பிளாஷ்பேக்: நம்பிக்கை தந்த 'நவரச நாயகன்' கார்த்திக்கின் 100வது திரைப்படம் | தள்ளிப்போகுதா கூலி பாடல் வெளியீட்டு விழா | தீபிகாவிற்கு கிடைத்த கவுரவம் : 2026 ‛‛ஹாலிவுட் வாக் ஆப் பேம்'' -விற்கு தேர்வு | அனுஷ்காவின் ‛காட்டி' படம் மீண்டும் தள்ளிப் போகிறதா? | சினிமாவில் அட்ஜஸ்ட்மென்ட் பிரச்னையா...? : இவானா அளித்த பதில் | திருவண்ணாமலையில் கண்ணீருடன் தரிசனம் செய்த அம்பிகா |
தமிழில் விஜய் சேதுபதி பிக்பாஸ் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கி வருவதை போன்று ஹிந்தி பிக்பாஸ் நிகழ்ச்சியை சல்மான் கான் தொகுத்து வழங்கி வருகிறார். அந்த நிகழ்ச்சியில் பிக்பாஸ் போட்டியாளர்களுக்கு அளிக்கப்பட்ட ஒரு டாஸ்கில், கழுதையை பராமரிக்க வேண்டும் என்று கூறியவர்கள், ஒரு கழுதையை பிக்பாஸ் வீட்டுக்குள் கொண்டு வந்து கட்டி போட்டிருக்கிறார்கள். ஆனால் இது குறித்த பிரோமோ வெளியிடப்பட்டதை அடுத்து சல்மான்கான் மற்றும் ஹிந்தி பிக்பாஸ் தயாரிப்பாளர்களுக்கு பீட்டா அமைப்பு கடிதம் எழுதியிருக்கிறது.
அதில், விலங்குகளை பொழுது போக்குவதற்காக பயன்படுத்துவதை தவிர்க்க வேண்டும். இது அவற்றுக்கு மனஅழுத்தம் அளிப்பது மட்டுமின்றி அதை பார்ப்பவர்களுக்கும் மன உளைச்சலை ஏற்படுத்தும். அதனால் அந்த கழுதையை உடனடியாக ஒப்படைக்க வேண்டும் என்று பீட்டா அமைப்பு தெரிவித்துள்ளது. ஆனபோதும் ஹிந்தி பிக்பாஸ் நிகழ்ச்சியின் தயாரிப்பாளர்கள், பீட்டா அமைப்பின் இந்த கடிதத்திற்கு இன்னும் பதில் கொடுக்கவில்லை.