மீண்டும் சிவா இயக்கத்தில் அஜித் நடிக்கிறாரா? | மகுடம் படத்தின் அப்டேட் தந்த விஷால் | பராசக்தி படத்திற்காக சிறப்பு கண்காட்சி | ரஜினி பிறந்தநாளில் “படையப்பா” ரிட்டர்ன்ஸ் | இண்டிகோ விவகாரத்தில் விமான ஊழியர்களை திட்டாதீர்கள் : சோனு சூட் ஆதரவு குரல் | பிரித்விராஜூக்கு தாத்தாவாக நடிக்கும் மோகன்லால் | ஜப்பானில் ரசிகர்களுடன் பாகுபலி தி எபிக் படத்தை பார்த்து ரசித்த பிரபாஸ் | வருட இறுதியில் நிவின்பாலிக்கு டபுள் ஜாக்பாட் | பார்த்தால் பசிதீரும், ஒரு அடார் லவ், சிவாஜி : ஞாயிறு திரைப்படங்கள் | 2025 கூகுள் சர்ச் : 3வது இடத்தில் 'கூலி' |

பிரபல தொழிலதிபரான ரத்தன் டாடா வயது மூப்பால் வரும் உடல்நலப் பிரச்னையால் மும்பை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில் நேற்று(அக்., 9) இரவு காலமானார். அவரது மறைவுக்கு பிரதமர் நரேந்திர மோடி உள்ளிட்ட அரசியல் தலைவர்களும், ரஜினி உள்ளிட்ட திரைப்பிரபலங்களும், முகேஷ் அம்பானி உள்ளிட்ட தொழிலதிபர்களும் இரங்கல் தெரிவித்துள்ளனர். பல பிரபலங்கள் அவரது உடலுக்கு நேரில் அஞ்சலி செலுத்தினர்.
டாடா குழுமம் பல்வேறு தொழில்களில் களமிறங்கி வெற்றி பெற்றதற்கு முக்கிய காரணமாக இருந்தவர் ரத்தன் டாடா. இவர் பல்வேறு தொழில்களில் சாதித்தாலும் சினிமா பக்கம் ஆர்வம் காட்டவில்லை. சினிமா பார்க்க தனக்கு நேரமில்லை என்று முன்பு கூறியுள்ள இவர் பாலிவுட்டில் ஒரே ஒரு படம் மட்டும் தயாரித்துள்ளார்.
2004ல் விஜய் பட் இயக்கத்தில் அமிதாப் பச்சன், ஜான் ஆபிரஹாம் மற்றும் பிபாசா பாசு நடிப்பில் வெளியான படம் ‛ஆட்பார்'. இந்த படத்தை ரத்தன் டாடா தான் இணை தயாரிப்பாளராக இருந்து தயாரித்தார். அன்றைய காலக்கட்டத்தில் ரூ.9 கோடி செலவில் தயாரான படம் தோல்வியை தழுவியது. இதனால் தான் என்னவோ அதன்பின் இவர் படங்களே தயாரிக்கவில்லை. ரத்தன் டாடா கால்பதித்து சறுக்கிய ஒரே தொழில் சினிமா என்று கூட சொல்லலாம்.