ரோட்டர்டாம் திரைப்பட விழாவிற்கு செல்லும் ‛மயிலா' | ரஜினி - கமல் இணையும் படம் குறித்து அப்டேட் கொடுத்த சவுந்தர்யா ரஜினி - ஸ்ருதிஹாசன்! | சமந்தாவின் 'மா இண்டி பங்காரம்' படப்பிடிப்பு தொடங்கியது! | கரூர் சம்பவம் தொடர்பாக விஜய்யை விமர்சித்தாரா சூரி? -அவரே கொடுத்த விளக்கம் | பிரபாஸ் படத்தில் நடிக்கும் பழம்பெரும் நடிகை காஞ்சனா | 'காந்தாரா சாப்டர் 1' படத்திற்கு அல்லு அர்ஜுன் பாராட்டு | விஷ்ணு விஷால் என் என்ஜினை ஸ்டார்ட் செய்து வைத்தார் : கருணாகரன் | ஒரே ஆண்டில் தமிழில் இரண்டு வெற்றிப் படங்களில் அனுபமா பரமேஸ்வரன் | மாஸ்க் படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு | ஓடிடியில் அடுத்த வாரம் வரும் 'லோகா' |

ஷாரூக்கான், தீபிகா படுகோனே, சத்யராஜ் நடித்த 'சென்னை எக்ஸ்பிரஸ்' படத்தை இயக்கிய ரோகித் ஷெட்டி இயக்கத்தில் அஜய் தேவகன், கரீனா கபூர், ரன்வீர் சிங், அக்ஷய் குமார், தீபிகா படுகோனே, டைகர் ஷெராப், அர்ஜுன் கபூர், ஜாக்கி ஷெராப் மற்றும் பலர் நடிப்பில் உருவாகியுள்ள படம் 'சிங்கம் அகைன்'.
இப்படத்தின் டிரைலர் நேற்று யு டியுப் தளத்தில் வெளியானது. டிரைலர் மட்டுமே 5 நிமிடம் வரை ஓடுகிறது. அதில் படத்தில் உள்ள அனைத்து முக்கிய காட்சிகளையும் காட்டியது போல, ஒரு முழு படத்தைப் பார்த்த உணர்வே ஏற்படுகிறது.
இப்படி ஒரு டிரைலரை இதுவரை பார்த்ததில்லை என ரசிகர்கள் பலரும் சமூக வலைத்தளங்களில் கமெண்ட் செய்து வருகிறார்கள். ராமாயணக் கதையின் காட்சிகளுடன் இப்படத்தின் கதாபாத்திரங்களை உருவகப்படுத்தி படத்தை உருவாக்கி இருக்கிறார்கள் எனத் தெரிகிறது.
படத்தில் உள்ள முக்கிய நடிகர்கள் அனைவருமே பாலிவுட்டின் அன்றைய, இன்றைய முன்னணி நட்சத்திரங்கள்தான். ஒவ்வொருவரின் ரசிகர்கள் வந்து படத்தைப் பார்த்தால் கூட படத்தை ஓட வைத்துவிடலாம்.
'கேஜிஎப்' இசையமைப்பாளர் ரவி பர்சூர் இப்படத்திற்கு இசையமைத்திருக்கிறார். ரன்வீர் சிங்கின் டிராக் ஒன்றிற்கு தமன் இசையமைத்துள்ளார்.
தீபாவளியை முன்னிட்டு நவம்பர் 1ம் தேதி வெளியாக உள்ள இப்படத்தின் டிரைலர் 'டிரோல்' செய்யப்பட்டாலும் அதற்குள் 29 மில்லியன் பார்வைகளைக் கடந்துள்ளது.




