குட் பேட் அக்லி டிரைலர் எப்போது? | பழம்பெரும் ஹிந்தி நடிகர் மனோஜ் குமார் காலமானார் | ஏப்ரல் முதல் வாரம் முழுவதும் நெட்பிளிக்ஸ் ஆதிக்கம் | ரூ.52 கோடி வசூலுடன் வலம் வரும் வீர தீர சூரன் | 'இட்லி கடை' புதிய வெளியீட்டுத் தேதி எப்போது? | 'குட் பேட் அக்லி' முன்பதிவு இன்று முதல் ஆரம்பம் | பாட்டு பாடி, பழைய நினைவுகளை பகிர்ந்து பாரதிராஜாவை தேற்றிய கங்கை அமரன் | பெண் குழந்தைக்கு தந்தையான ரெடின் கிங்ஸ்லி | துருவ நட்சத்திரம் : காத்திருக்கும் விக்ரம் | 25 வயதில் மகன் இருக்கையில் தந்தையாக நடிக்க தயங்கும் ஹீரோக்கள் : சசிகுமார் ஆதங்கம் |
கிறிஸ்தவ, முஸ்லிம் மத பண்டிகைகளுக்கு வாழ்த்து சொல்லி வந்த நடிகரும் தமிழக வெற்றிக் கழகம் கட்சி தலைவருமான விஜய், விநாயகர் சதுர்த்திக்கு வாழ்த்து சொல்லவில்லை. ஆனால் ஓணம் பண்டிகைக்கு வாழ்த்து சொல்லி இருந்தார். அதையடுத்து விநாயகர் சதுர்த்திக்கு திமுக பாணியில் விஜய் வாழ்த்து சொல்லவில்லை என்று கடுமையான விமர்சனங்கள் எழுந்ததோடு, விஜய் திமுக.,வின் பி டீம் என்றும் விமர்சிக்கப்பட்டது.
இப்படியான நிலையில் இன்று ஆயுத பூஜை, சரஸ்வதி பூஜையையொட்டி நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகம் ஒரு வாழ்த்து செய்தி வெளியிட்டு இருக்கிறது. அந்த செய்தியில், தொழில் வளத்தில் தொடர்ந்து முன்னேறுவதற்கு ஆதாரமாக விளங்கும் தொழில் கருவிகளையும், பயன்படுத்தும் வாகனங்களையும், அறிவை போதிக்கும் புத்தகங்களையும் வணங்கி வழிபடும் ஆயுத பூஜை சரஸ்வதி பூஜை விஜயதசமி ஆகிய திருநாள்களில் நீங்கள் மேற்கொள்ளும் அனைத்து புதிய முயற்சிகளும் வெற்றி பெற இனிய வாழ்த்துக்கள் என்று எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.