ரஜினியை இயக்கும் ‛டான்' இயக்குனர் : 2027 பொங்கலுக்கு ரிலீஸ் | 'ஜனநாயகன்' டிரைலர் : எதிர்பார்ப்புகள் என்ன ? | தமிழில் முதல் வெற்றியைப் பெறுவாரா பூஜா ஹெக்டே ? | இன்று ஒரே நாளில் மூன்று முக்கிய வெளியீடுகள் | சிவகார்த்திகேயனுக்கு கண்டனம் தெரிவித்த சிவாஜி சமூக நலப்பேரவை | பொங்கல் போட்டியில் முக்கிய கதாநாயகிகள் | முன்பதிவில் ஜனநாயகன் செய்த சாதனை | 300வது படத்தை எட்டிய யோகி பாபு | மீண்டும் ரசிகர்களை ஏமாற்றிய கருப்பு | 75 கோடி வசூலை கடந்த சர்வம் மாயா |

பாலிவுட் நடிகர் அமிதாப் பச்சனை பொருத்தவரை ரசிகர்களுடன் சோசியல் மீடியாவில் எப்போதும் தொடர்பில் இருப்பவர். தன்னுடைய பர்சனல் விஷயங்கள், சினிமா தகவல்கள் அனைத்தையும் தன் கைப்படவே சோசியல் மீடியாவில் தொடர்ந்து பதிவிட்டு வருகிறார். அந்த வகையில் சமீபத்தில் அவர் தனது முகநூல் பக்கத்தில் பட்டு வேட்டி, சட்டை, அங்க வஸ்திரம் அணிந்து ஓணம் வாழ்த்துக்களை கூறியிருந்தார். ஆனால் ஓணம் பண்டிகை முடிந்து கிட்டத்தட்ட 10 நாட்கள் கழித்து அமிதாப் பச்சன் இப்படி வாழ்த்து சொன்னது ரசிகர்களிடம் குறிப்பாக மலையாளிகளிடம் ஆச்சரியத்தை ஏற்படுத்தியது.
இதன் காரணமாகவே பலரும் அமிதாப்பச்சனை கிண்டல் செய்து கமெண்ட் பதிவிட்டனர். அதாவது அமிதாப்பச்சனின் அட்மின் குழுவினர் ஓணம் பண்டிகையை மறந்து விட்டார்களோ என்றும், இல்லை கடந்த வருடம் செப்டம்பர் 14ம் தேதி ஓணம் பண்டிகை வந்ததால் அதை மனதில் வைத்து மறதியாக அமிதாப்பச்சன் இப்போது ஓணம் வாழ்த்துக்கள் சொல்லி இருக்கிறாரோ என்றும் கூட கிண்டலாக கருத்துக்களை வெளியிட்டனர்.
ஆனாலும் இதை கவனித்த அமிதாப் பச்சன் உடனடியாக தனது முகநூல் பக்கத்தில், “பண்டிகை கொண்டாட்டம் என்பது எப்போதுமே ஒரு கொண்டாட்டம் தான்.. அதற்கான மதிப்பும் மரியாதையும் ஒருபோதும் அழிவதில்லை. நான் எப்போதுமே என்னுடைய பதிவுகளை சொந்தமாகவே வெளியிடுகிறேன். எனக்கென யாரும் ஏஜென்ட் இல்லை.. இருந்தாலும் வருத்தப்படுகிறேன்” என்று கூறியுள்ளார்.