திருமணத்திற்கு பிறகு வாழ்க்கை எப்படி உள்ளது? தொகுப்பாளினி பிரியங்கா சொன்ன பதில் | மூன்று நாட்களில் விஜய்யின் 'சச்சின்' படம் செய்த வசூல் சாதனை! | இந்த வாரம் 'ராமாயணா' படப்பிடிப்பில் கலந்து கொள்ளும் யஷ்! | மஹாராஷ்டிரா கோலாப்பூரில் உள்ள மகாலஷ்மி கோவிலில் சாமி தரிசனம் செய்த சூர்யா - ஜோதிகா! | உங்களை நீங்களே பாராட்டிக் கொள்ளுங்கள்! - ரோஜா பூ உடன் ராஷ்மிகா வெளியிட்ட பதிவு | இரண்டாவது முறையாக ஜோடி சேரும் நிதின், கீர்த்தி சுரேஷ் | ஊர்மிளாவுக்கு 50 வயது மாதிரியா தெரிகிறது… !! | ஹீரோயின்களுக்கு முக்கியத்தும் உள்ள கேங்ஸ்டர் கதையை எழுதுங்கள் : கார்த்திக் சுப்பராஜிற்கு பூஜா வேண்டுகோள் | போய் வா நண்பா…ஒரு நாளில் ஒரு மில்லியன்… | கேங்கர்ஸ் Vs சுமோ - ரசிகர்கள் ஆதரவு யாருக்கு? |
நடிகர் நெப்போலியனின் மூத்த மகன் தனுஷ் தசை சிதைவு நோயால் சிறுவயதிலேயே பாதிக்கப்பட்டு இருக்கிறார். அவருக்கு அடுத்த மாதம் திருமணம் நடக்க இருப்பதால் சிலர் இவர் திருமணம் செய்வது தவறு என்று விமர்சித்து வருகிறார்கள். இதற்கு பதிலடி கொடுக்கும் விதமாக தனுஷ் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.
அந்த வீடியோவில் அவர் பேசியதாவது: சமீப காலமாகவே என்னைப் பற்றி பலர் பேசிக் கொண்டிருக்கிறார்கள் என்று எனக்கு தெரியும். நான் இணையத்தில் எல்லாவற்றையும் பார்த்துக் கொண்டுதான் இருக்கிறேன். என்னை பற்றி சிலர் நெகட்டிவாக பேசிக்கொண்டு இருந்தாலும் அது எனக்கு மோட்டிவாக தான் இருக்கிறது. என்னால் முடியாது என்று சிலர் சொல்வதை கேட்கும் போது நான் யார் என்று ப்ரூவ் பண்ணி ஜெயிச்சு காட்டணும் என்று நினைக்கிறேன். என்னை மாதிரி இருக்கிறவங்க இதை பண்ண முடியாது, அதை பண்ண முடியாதுன்னு நிறைய பேரு சொல்லுவாங்க. அதையெல்லாம் நீங்க கேட்காதீங்க. விடாமுயற்சியோடு ட்ரை பண்ணிட்டே இருங்க. நம்மால் அச்சீவ் பண்ண முடியும். இவ்வாறு தன்னம்பிக்கையுடன் அவர் வீடியோவில் பேசியுள்ளார்.
அமெரிக்காவில் ஐடி நிறுவனம் ஒன்றை நடத்தி வரும் நெப்போலியனின் மூத்த மகன் தனுஷிற்கு நான்கு வயதில் இருக்கும் போது தசை சிதைவு நோய் பாதிக்கப்பட்டது. அதற்காக பல மருத்துவமனைகளில் சிகிச்சை பார்த்தும் குணமாகாத நிலையில் தன்னுடைய மகன் ஆசைப்பட்டதால் இப்போது அமெரிக்காவில் வாழ்ந்து வருகிறார். தன்னுடைய மகனுக்கு 24 வயது ஆகிவிட்ட நிலையில் திருமணம் செய்ய வேண்டும் என்று பெண் பார்த்த நெப்போலியன் தமிழக பெண் தான் எனக்கு மருமகளாக வேண்டும் என்று எதிர்பார்த்திருக்கிறார்.
அவர் எதிர்பார்த்தபடியே திருநெல்வேலி மாவட்டம் மூலைக்கரைப்பட்டியை சேர்ந்த பெண் ஒருவரோடு தனுஷிற்கு எங்கேஜ்மென்ட் முடிவடைந்து இருக்கிறது. நவம்பர் மாதத்தில் திருமணம் நடைபெற இருக்கிறது. நெப்போலியன் அமெரிக்காவில் வசித்து வருவதால் அங்கு திருமணம் நடத்தினால் குடியுரிமை பிரச்னை வரும் என்பதால் ஜப்பானில் தன்னுடைய மகன் திருமணத்தை நடத்த இருக்கிறார்.