அருந்ததி படம் ஹிந்தியில் ரீமேக் ஆகுவது உறுதி! | வெங்கட் பிரபு, சிவகார்த்திகேயன் படத்தின் கதாநாயகி யார் தெரியுமா? | பிரபாஸ் படத்தில் பிரபல வெளிநாட்டு ஆக்சன் ஹீரோ? | விக்ரம் 63வது படத்தின் புதிய அப்டேட்! | அட்லி, அல்லு அர்ஜுன் படத்தில் இணைந்த மிருணாள் தாகூர்! | பென்ஸ் படத்தில் லாரன்ஸூக்கு ஜோடி இல்லையா? | இளன் இயக்கி, நடிக்கவுள்ள கதாநாயகி யார் தெரியுமா? | ஜூடோபியா : 9 ஆண்டுகளுக்கு பிறகு வரும் 2ம் பாகம் | 'தாரணி'யில் நடிகையின் கதை | போஸ் வெங்கட்டின் ஸ்போர்ட்ஸ் மூவி |

1980களில் ரஜினி - கமல் படங்கள் மோதிக் கொண்டிருந்த காலத்தில் அதற்கு அடுத்த வரிசையில் அதிகம் மோதிக் கொண்டது விஜயகாந்த் - பிரபு படங்கள். இருவருக்குமே கணிசமான ரசிகர்கள் இருந்ததால் இருவர் படமும் ஒரே நாளில் வெளியானால் தியேட்டர் களைகட்டும், இந்த போட்டியை அந்தக் காலத்தில் விநியோகஸ்தர்களும், தியேட்டர் அதிபர்களும் விரும்பினார்கள்.
திட்டமிட்டு விஜயகாந்த் படங்களும், பிரபு படங்களும் வெளியிடப்படவில்லை. ஆனாலும் யதேச்சையாக இருவர் படங்களும் ஒரேநாளில் வெளியானது. அந்த வகையில் 33 முறை இருவர் படங்களும் ஒரே நாளில் வெளிவந்து மோதி இருக்கிறது. அதில் சில முக்கிமான படங்களை பார்க்கலாம்.
நல்ல நாள் - கைராசிக்காரன்
வைதேகி காத்திருந்தாள் - வம்ச விளக்கு
ராமன் ஸ்ரீராமன் - நீதியின் நிழல்
கரிமேடு கருவாயன் - சாதனை
தர்ம தேவதை - அறுவடைநாள்
வீரபாண்டியன் - சின்னப்பூவே மெல்ல பேசு
உள்ளத்தில் நல்ல உள்ளம் - அக்னி நட்சத்திரம்
தம்பி தங்க கம்பி - என் தங்கச்சி படிச்சவ
செந்தூர பூவே - தர்மத்தின் தலைவன்
புலன் விசாரணை - காவலுக்கு கெட்டிக்காரன்
கேப்டன் பிரபாகரன் - சின்னத்தம்பி
மாநகர காவல் - ஆயுள் கைதி
சின்னக்கவுண்டர் - பாண்டித்துரை
காவிய தலைவன் - செந்தமிழ் பாட்டு
கோவில் காளை - சின்ன மாப்பிள்ளை
எங்க முதலாளி - உழவன்
சேதுபதி ஐபிஎஸ் - ராஜகுமாரன்
பெரிய மருது - ஜல்லிக்கட்டு காளை
கருப்பு நிலா - கட்டுமரக்காரன்
அலெக்சாண்டர் - பாஞ்சாலங்குறிச்சி
உளவுத்துறை - பொன்மனம்
வீரம் வௌஞ்ச மண்ணு - என் உயிர் நீதானே
வானத்தைபோல - திருநெல்வேலி