‛ஜனநாயகன்' படத்திற்கு செக் வைக்க வரும் ‛பராசக்தி' | கமல் படத்தில் இணைந்த பிரபல மலையாள எழுத்தாளர் | வட சென்னை பெண்ணாக சாய் பல்லவி | இறுதிக்கட்ட படப்பிடிப்பில் காஞ்சனா 4 | அறிவிக்கப்பட்டவை 10... வந்தவை 7 : இன்றைய நிலவரம் | ஓடாமல் போன 'காட்டி' : அனுஷ்காவின் திடீர் முடிவு | இரண்டாவது வாரத்தில் 'மதராஸி', லாபம் கிடைக்குமா ? | 11 ஆண்டுகளுக்குப் பிறகு தமிழில் நஸ்ரியா | ஹவுஸ்புல் ஆகும் ஜப்பானியத் திரைப்படம் | கார்மேனி செல்வத்தின் கதை என்ன? |
தெய்வீகமும், தேசியமும் எனது இரு கண்கள் என்ற கொள்கையுடன் வாழ்ந்தவர் பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர். இந்திய சுதந்திர போராட்டத்தில் பங்கேற்று சிறை சென்றவர் . தென்னிந்திய தலைவர்களில் ஒருவரான அவர், நேதாஜி சுபாஷ் சந்திரபோஸின் நண்பராகவும் திகழ்ந்தவர்.
அவர் காலத்தில் சினிமா இருந்தது. ஆனால் அவர் சினிமா பார்த்ததில்லை. சினிமா மக்களுக்கு அவசியமில்லாத ஒன்று, இதனால் அவர்களின் உழைப்பும், நேரமும் வீணாவதாக கருதினார். அப்படிப்பட்ட தேவர் பார்த்த ஒரே படம் 'ஔவையார்'.
சந்திரலேகாவைப் போல மற்றொரு பிரமாண்ட படைப்பாக 1953ல் 'ஔவையார்' படத்தை வாசன் தயாரித்தார். ஔவையார் பாத்திரத்தில் பிரபல கர்நாடக சங்கீதப் பாடகியான கே.பி.சுந்தராம்பாள் நடித்தார். தன் வாழ்க்கையில் சினிமாவே பார்த்திராத தேவரை பார்க்க வைத்த படம் ஔவையார். சிவகங்கையிலுள்ள ஶ்ரீராம் தியேட்டருக்கு சென்று படம் பார்த்தார். படம் அவருக்கு பிடித்துப்போனதால் இரண்டாவது முறையும் இந்தத் தியேட்டருக்கு வந்து 'ஔவையார்' படத்தை தேவர் ரசித்துப் பார்த்தார். தனது படத்தை 2 முறை பார்த்ததற்காக தேவருக்கு கடிதம் எழுதி நன்றி தெரிவித்தார் வாசன்.