மறு தணிக்கைக்கு செல்லும் பராசக்தி | வருட இறுதியில் ஓடிடியில் மகிழ்விக்க வரிசைக்கட்டும் 'புதுப்படங்கள்'..! | குரு சோமசுந்தரம், அனுமோல் இணைந்து நடிக்கும் பாரிஸ் கபே | ஜனநாயகன் படத்தை தெலுங்கில் வெளியிடும் பிரபல நிறுவனம் | ‛ஆசாத் பாரத்' பற்றி நெகிழும் இந்திரா திவாரி | ஜெயிலர் 2 படத்தில் ஷாருக்கான் : உறுதிசெய்த பாலிவுட் நடிகர் | விஜய்யின் வளர்ச்சியை தடுக்க நினைக்கின்றனர் : நடிகை மல்லிகா | இம்மார்ட்டல் படத்தின் டீசர் எப்படி இருக்கு | இருமனம் ஒருமனமான தருணம்... : 2025ல் கெட்டிமேளம் கொட்டிய திரைப்பிரபலங்கள்...! | பிளாஷ்பேக்: புதுமுகங்களின் அணிவகுப்பில் புதுமை படைத்த “பொண்ணுக்கு தங்க மனசு” |

'96, மெய்யழகன்' படங்களை அடுத்து பிரேம்குமார் இயக்கத்தில், வேல்ஸ் பிலிம் இன்டர்நேஷனல் தயாரிப்பில் விக்ரம் நடிக்கும் 64வது படம் பற்றிய அதிகாரப்பூர்வ அறிவிப்பு கடந்த ஜுலை மாதம் வெளியானது. ஆகஸ்ட் முதல் படப்பிடிப்பு ஆரம்பமாகும் என்றும், 2026 ஜனவரியில் படத்தை வெளியிட திட்டமிட்டார்கள் என்றும் பேசப்பட்டது. ஆனால், கடந்த சில வாரங்களாக இப்படம் 'டிராப்' ஆகிவிட்டதாகச் சொல்கிறார்கள்.
ஆனால், சமீபத்திய பேட்டி ஒன்றில் இந்தப் படம் குறித்த கேள்விக்கு ''விக்ரம் படத்திற்காக கதை எழுத வேண்டி இருக்கிறது. அதற்கு நான்கு மாதங்கள் தேவை,'' என சொல்லி இருக்கிறார் பிரேம்குமார். ஒரு படத்திற்கான கதையைத் தேர்வு செய்யாமல் விக்ரம் 64 படத்தை அறிவித்தார்களா என்ற சந்தேகம் எழுந்துள்ளது.
ஒரு வரிக் கதையையோ அல்லது கதைச் சுருக்கத்தை மட்டுமே கேட்டு அதில் நடிக்க விக்ரம் சம்மதிக்க மாட்டார் என்பது திரையுலகத்தினருக்குத் தெரியும். முழு கதையும், அவரது கதாபாத்திரமும் பிடித்திருந்தால் மட்டுமே நடிப்பார். அப்படியிருக்க அவர் கதைச் சுருக்கத்தை மட்டும் கேட்டு விக்ரம் 64 படத்தில் நடிக்க சம்மதித்திருக்க மாட்டார் என்கிறார்கள். அந்தப் பட விவகாரத்தில் வேறு ஏதோ நடந்திருக்கிறது. அதை மறைக்கத்தான் பிரேம்குமார் தற்போது கதை எழுத அவகாசம் தேவைப்படுகிறது என்று சொல்கிறார் என்கிறார்கள்.
மடோன் அஷ்வின் இயக்கத்தில் விக்ரம் நடிப்பதாக அறிவிக்கப்பட்ட விக்ரம் 63 படமும் டிராப் என்று தகவல். ஆக, விக்ரமின் 63 மற்றும் 62வது படங்களை யார் இயக்கப் போகிறார்கள் என்பது தற்போது வரை மர்மமாகவே உள்ளது.