பிளாஷ்பேக் : ரீமேக்கில் தோல்வியடைந்த முதல் படம் | திடீர் நடிகையான தயாரிப்பாளர் | ஓடிடியில் நேரடியாக வெளியாகும் ஸ்மிருதி வெங்கட் படம் | சர்வதேச திரைப்பட விழாவில் விருது வென்ற தமிழ் படம் | ‛டியூட்'-ல் இடம் பெற்ற ‛கருத்த மச்சானை' நீக்க நீதிமன்றம் உத்தரவு | புயல் மிரட்டும் வேளையிலும் இந்த வாரம் 12 படங்கள் ரிலீஸ் | சிரஞ்சீவி ரசிகர்களிடம் மன்னிப்பு கேட்ட கீர்த்தி சுரேஷ்! | லாக் டவுன் டிரைலர் வெளியானது | நடிகைகள் அம்பிகா, ராதாவின் தாயார் காலமானார் | மலையாள சினிமாவில் முதன்முறையாக ஞாயிற்றுக்கிழமை வெளியாகும் படம் |

‛ராயன்' படத்தை இயக்கிய தனுஷ் அடுத்து இயக்கி உள்ள படம் 'நிலவுக்கு என் மேல் என்னடி கோபம்'. சுருக்கமாக ‛நீக்' என குறிப்பிடுகின்றனர். இதில் கதாநாயகனாக அவரது அக்கா மகன் பவிஷ் அறிமுகமாகிறார். அனைகா சுரேந்திரன், மேத்யூ தாமஸ், பிரியா பிரகாஷ் வாரியர், சரத்குமார் உள்ளிட்ட பலர் முக்கிய வேடத்தில் நடிக்கின்றனர். ஜி.வி. பிரகாஷ் இசையமைக்கும் இந்த படத்தை தனுஷின் வுண்டர்பார் பிலிம்ஸ் மற்றும் ஆர்.கே.புரொடக்சன்ஸ் என இரு நிறுவனங்கள் இணைந்து தயாரிக்கின்றனர். சமீபத்தில் இந்த படத்திலிருந்து வெளிவந்த 'கோல்டன் ஸ்பெரோ' எனும் பாடல் இன்னும் வைரலாக உள்ளது. படப்பிடிப்பு முடிந்து மற்ற பணிகள் நடந்து வருகின்றன. இந்த நிலையில் இத்திரைப்படத்தை வருகின்ற டிசம்பர் மாதத்தில் கிறிஸ்துமஸ் வாரத்தில் வெளியிட திட்டமிட்டு வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.




