ராஜமவுலி, மகேஷ் பாபு படத்தில் இணையும் பிரியங்கா சோப்ரா | பாலிவுட்டில் கால் பதிக்கும் அமரன் பட இயக்குனர் | ரசிகர்களைக் திருப்திப்படுத்த மோகன்லால் எடுத்த அதிரடி முடிவு | சார்பட்டா பரம்பரை 2 அப்டேட் தந்த ஆர்யா | விடாமுயற்சி படத்தில் விஜய் டிவி பிரபலம் | 2024ம் ஆண்டின் கடைசி படப்பிடிப்பு- பூஜாஹெக்டே வெளியிட்ட பதிவு | மண்ணே இல்லாத சாகுபடி முறை - முதலீடு செய்த சமந்தா | ரஜினியின் ஜெயிலர் 2 புதிய அப்டேட் வெளியானது | முதல் நாளில் உலக அளவில் 9 கோடி வசூலித்த விடுதலை 2 | வனிதா படத்தின் மோஷன் போஸ்டர் வெளியீடு |
இயக்குனர் சிவாவின் தம்பியும் வீரம், அண்ணாத்த உள்ளிட்ட சில படங்களில் நடித்தவருமான நடிகர் பாலா தற்போது மலையாள திரைப்படங்களில் கவனம் செலுத்தி நடித்து வருகிறார். கடந்த 2010ல் அவர் பிரபல மலையாள பாடகி அம்ருதா சுரேஷ் என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார். அதன்பிறகு அவர்களுக்குள் கருத்து வேறுபாடு ஏற்பட்டு பிரிந்தனர். இவர்களது மகள் அவந்திகா தற்போது தனது தாயுடன் வசித்து வருகிறார். பாலா எலிசபெத் என்கிற டாக்டரை இரண்டாவதாக திருமணம் செய்து கொண்டுள்ளார். அம்ருதா சுரேஷ் பிரபல மலையாள இசையமைப்பாளர் கோபி சுந்தருடன் காதல் வயப்பட்டு கொஞ்ச காலம் லிவிங் ரிலேஷன்ஷிப்பில் இருந்தவர் தற்போது அதிலிருந்து விலகி இருக்கிறார்.
நடிகர் பாலா அவ்வப்போது தனது பேட்டிகளில் தனது மகள் அவந்திகாவை பார்க்க முடியவில்லை என்றும் தனது மகள் மீது அதிக அன்பு வைத்திருப்பதாகவும் தனது ஏக்கத்தை வெளிப்படுத்தி வந்தார். இந்த நிலையில் நடிகர் பாலாவின் மகள் அவந்திகா, ‛தன் தாயை தனது தந்தை துன்புறுத்தியதை தான் சிறுவயதில் நேரில் பார்த்ததாகவும் அந்த சமயத்தில் தன்னால் எதுவும் செய்ய முடியாத நிலையில் இருந்தது குறித்து வருந்துவதாகவும் இனி தனது வாழ்க்கையில் எந்த ஒரு நிலையிலும் தந்தையின் குறுக்கீடு இருக்க விரும்பவில்லை' என்றும் கூறி ஒரு வீடியோ வெளியிட்டு இருந்தார்.
மகளின் இந்த வீடியோவால் அதிர்ச்சியான பாலா கண்ணீருடன் ஒரு வீடியோ வெளியிட்டு இனிமேல் தனது மகளை எப்போதும் நான் சந்திக்க போவதில்லை, இந்த நாள் என் வாழ்க்கையில் மறக்க முடியாத வலி நிறைந்த ஒரு நாள் என்று கூறியிருந்தார். இப்படி மாறி மாறி வீடியோக்கள் வெளியான நிலையில் பாலாவிடம் அவர் அம்ருதாவை திருமணம் செய்த புதிதில் டிரைவராக பணியாற்றிய இர்ஷாத் என்பவர் பாலா தனது மனைவியை அடித்து துன்புறுத்தியது உண்மைதான் என்று கூறி தன் பங்கிற்கு ஒரு வீடியோ வெளியிட்டுள்ளார்.
இந்த வீடியோவில் அவர் கூறும்போது, “பாலாவிடம் நான் 2010ல் டிரைவராக வேலை பார்த்தேன். அந்த சமயத்தில் அடிக்கடி கோபப்படுவார். அமிர்தாவை அவர் அடித்து துன்புறுத்தியதை நான் பார்த்துள்ளேன். என்னிடமும் கோபப்பட்டு சில முறை அடித்துள்ளார். அப்போது எனக்கு 18 வயது என்பதால் நான் அது பற்றி பொருட்படுத்தவில்லை. இத்தனை வருடங்களாக இது பற்றி நான் அமைதி காத்தாலும் தற்போது பாலாவும் அவரது மகளும் மாறி மாறி இப்படி வீடியோ வெளியிட்டுள்ள பின் இந்த உண்மையை சொல்ல வேண்டியது என்னுடைய தார்மீக கடமையாக கருதுகிறேன்” என்று கூறியுள்ளார்.