எமர்ஜென்சி படத்திற்கு பஞ்சாபில் தடை : கங்கனா கோபம் | 'விடாமுயற்சி' ரீமேக் உரிமை சிக்கலுக்குத் தீர்வு | ஷங்கருக்கு ஆதரவாகப் பேசினாரா தமன்? | ரசிகர்கள் கல் எறிய மாட்டார்கள் என நம்புகிறேன் : விஷால் | விரைவில் திரைக்கு வரும் தினேஷின் கருப்பு பல்சர் | விஜயகாந்த் படத்தின் தலைப்பில் நடிக்கிறாரா தனுஷ்? | சமரச பேச்சுவார்த்தை - ரவி மோகன், ஆர்த்தியின் விவாகரத்து வழக்கு தள்ளிவைப்பு | ரஜினியின் ஜெயிலர் 2 அறிமுக டீசரின் மேக்கிங் வீடியோ வெளியானது | இயக்குனர், தயாரிப்பாளர் ஜெயமுருகன் காலமானார் | விவசாயத்தின் முக்கியத்துவம் பேசும் 'மருதம்' |
ஜூனியர் என்டிஆர் நடிப்பில் கொரட்டலா சிவா இயக்கத்தில் கடந்த வெள்ளியன்று தேவரா திரைப்படம் வெளியானது. ஜான்வி கபூர் கதாநாயகியாக நடித்துள்ள இந்த படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளார். ஆர்ஆர்ஆர் படத்தின் வெற்றியை தொடர்ந்து ஒரு சிறிய இடைவெளிக்கு பிறகு ஜூனியர் என்டிஆர் தனித்து நடித்த படமாக இது வெளியாகியுள்ளதால் ரசிகர்கள் மத்தியில் இந்த படத்திற்கான எதிர்பார்ப்பு மிகப்பெரிய அளவில் இருந்தது.
இந்த நிலையில் மஸ்தான் வலி என்கிற 35 வயதான ஜூனியர் என்டிஆரின் ரசிகர் ஒருவர் ஆந்திராவில் உள்ள திரையரங்கு ஒன்றில் இந்த படத்தை பார்த்து ஆரவாரம் செய்து ரசித்துள்ளார். ஆனால் திடீரென எதிர்பாராத விதமாக அவருக்கு மாரடைப்பு ஏற்படவே அருகில் இருந்தவர்கள் அவரை மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றனர். ஆனால் அவரை பரிசோதித்த மருத்துவர்கள் அவர் மாரடைப்பால் உயிரிழந்து விட்டதாக அறிவித்தனர். இதனைத் தொடர்ந்து அவருடன் படம் பார்க்க வந்த சக ரசிகர்களும் அவர்களின் உறவினர்களும் சோகத்தில் ஆழ்ந்துள்ளனர்.