''அப்பா ஒரு குழந்தை; ஆதாரமற்ற வதந்திகளை பரப்பாதீர்கள்'' - ஏ.ஆர்.ரஹ்மான் மகன் வேதனை | அழகுக்காக ஸ்ரீதேவி பட்ட சிரமம் : போனி கபூர் தகவல் | 'வேவ்ஸ்' ஓ.டி.டி., தளம் : பிரசார் பாரதி துவக்கம் | நவ.26ம் தேதியில் விடுதலை-2 படத்தின் இசை வெளியீட்டு விழா | தெலுங்கில் அறிமுகமாகும் மமிதா பைஜூ | திருமணத்திற்கு தயாராகும் தமன்னா | திருப்பதி கோவிலில் சாமி தரிசனம் செய்த சந்தானம் | நடிகை சீதா வீட்டில் நகை திருட்டு : போலீசில் புகார் | சமந்தா சொல்வது உண்மைதான் : அர்ஜுன் கபூர் ஒப்புதல் | சர்ச்சைகளை நீர்த்துப்போக செய்யும் விதமாக தயாராகிறதா மோகன்லால் - மம்முட்டி படம்? |
ஐக்கிய அரபு அமீரக அரசு, கடந்த 2019ம் ஆண்டில் தங்களது ஆளுகைக்கு உட்பட்ட நகரங்களில் நீண்ட நாட்கள் தங்கி வேலை பார்க்கவும் வசிக்கவும் கோல்டன் விசா வழங்கும் திட்டத்தை அறிமுகப்படுத்தியது. இப்படிப்பட்ட ஒரு சிறப்பு சலுகையை தென்னிந்திய திரையுலகை சேர்ந்த நட்சத்திரங்களுக்கு தொடர்ந்து வழங்கி வருகின்றனர். குறிப்பாக மலையாளம், தமிழ் இரண்டு மொழிகளை சேர்ந்த திரையுலக பிரபலங்கள் அதிக அளவில் இந்த கோல்டன் விசாவை பெற்று வருகின்றனர்.
அந்தவகையில் முன்னணி நடிகர்களான மோகன்லால், மம்முட்டி, பிரித்விராஜ், விஜய்சேதுபதி, குஷ்பு, மீரா ஜாஸ்மின், இளம் நடிகர்களான துல்கர் சல்மான், டொவினோ தாமஸ் சமீபத்தில் இயக்குனர் விஜய், தொகுப்பாளினி டிடி ஆகியோருக்கு கோல்டன் விசா வழங்கப்பட்டுள்ளது..
இந்தநிலையில் மலையாள திரையுலகின் பின்னணி பாடகியான அம்ருதா சுரேஷுக்கு கோல்டன் விசா வழங்கி கவுரவித்துள்ளது ஐக்கிய அரபு அமீரக அரசு. இயக்குனர் சிவாவின் தம்பியும் நடிகருமான பாலாவின் முன்னாள் மனைவிதான் இந்த அம்ருதா சுரேஷ். அதுமட்டுமல்ல, தற்போது பிரபல மலையாள இசையமைப்பாளர் கோபிசுந்தருடன் இவர் லிவிங் டுகெதர் ரிலேஷன்ஷிப்பில் ஒன்றாக வசித்து வருகிறார் என்பதும் குறிப்பிடத்தக்கது.