சாந்தனு, அஞ்சலி நாயர் நடிப்பில் ‛மெஜந்தா' | பாகிஸ்தானுக்கு எதிரான கதையா? ரன்வீர் சிங்கின் துரந்தர் படத்திற்கு தடை | முதல் படம் திரைக்கு வரும் முன்பே 3 ஹிந்தி படங்களில் நடிக்கும் ஸ்ரீ லீலா! | ஜனவரி 1ம் தேதி முதல் புதுக்கட்டுப்பாடு : தியேட்டர் அதிபர் சங்கம் முடிவு | சிறை டிரைலர் வெளியீடு | ஜனநாயகன் படத்தின் டீசர் எப்போது | சூப்பர் மனிதநேயம் கொண்ட மனிதர் ரஜினி: ஒய்.ஜி.மகேந்திரன் வாழ்த்து | மெய்யழகன் விமர்சனம் குறித்து கார்த்தி பதில் | பனாரஸில் தேவநாகரி லோகோ உடன் ஒளிர்ந்த அவதார் பயர் அண்ட் ஆஷ் | ‛கராத்தே பாபு' டப்பிங்கை துவங்கிய ரவி மோகன் |

சமீபத்தில் பொங்கல் வெளியீடாக கடந்த ஜன.,11ல் விஜய் நடித்த வாரிசு மற்றும் அஜித் நடித்த துணிவு ஆகிய படங்கள் ஒரே நாளில் வெளியாகின. இதில் வாரிசு படத்தில் ராஷ்மிகா கதாநாயகியாக நடித்திருந்தார். சுல்தான் படத்தை தொடர்ந்து தமிழில் இவர் நடித்துள்ள இரண்டாவது படம் இது. அதேப்போல துணிவு படத்தில் அஜித்துடன் இணைந்து மஞ்சு வாரியர் நடித்திருந்தார். அசுரன் படத்தை தொடர்ந்து அவருக்கும் தமிழில் இது இரண்டாவது படம். இந்த இரண்டு படங்களுமே ஒரே நாளில் வெளியாகி இருவருக்கும் மிகப்பெரிய வரவேற்பை பெற்றுத் தந்துள்ளன.
இந்த நிலையில் இந்த படங்கள் வெளியாகி சரியாக 8 நாள் கழித்து அதாவது வரும் ஜன.,20ம் தேதி இந்த இருவரும் நடித்துள்ள படங்கள் மீண்டும் ஒரே தேதியில் வெளியாகும் இன்னொரு ஆச்சரியம் நிகழப்போகிறது. ராஷ்மிகா முதன்முதலாக பாலிவுட்டில் அடியெடுத்து வைத்த படமான மிஷன் மஞ்சு மற்றும் மலையாளத்தில் மஞ்சு வாரியர் நடித்துள்ள ஆயிஷா ஆகிய இரண்டு படங்களும் தான் ஜன-20ல் வெளியாகின்றன. இதில் மிஷன் மஞ்சு திரைப்படம் நேரடியாக ஓடிடி தளத்திலேயே வெளியாகிறது. மஞ்சு வாரியரின் ஆயிஷா தியேட்டர்களில் வெளியாகிறது.
ராஷ்மிகா நடிப்பில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு பாலிவுட்டில் அமிதாப்பச்சனுடன் இணைந்து நடித்த குட்பை திரைப்படம் வெளியாகி ரசிகர்களிடம் வரவேற்பை பெற தவறியது அதேசமயம் அவர் பாலிவுட்டில் முதன்முதலாக நடிக்க ஆரம்பித்த மிஷன் மஞ்சு படத்தை ஆர்வமாக எதிர்பார்த்த நிலையில் தற்போது அந்தப்படம் நேரடியாக ஓடிடியில் வெளியாவதால் இந்த படத்திலும் ராஷ்மிகா கவனிக்கப்படுவாரா என்பது ரிலீஸுக்கு பின்னால் தான் தெரிய வரும்.