நான் கார்த்தியின் தீவிர ரசிகை : கிர்த்தி ஷெட்டி | இன்னும் 50 நாள் : பராசக்தி புதிய போஸ்டர் வெளியீடு | ஆர்யன் படம் வருகிற 28-ல் நெட்பிளிக்சில் வெளியாகிறது | ஜாய் கிறிஸ்டில்லாவுக்கு எதிராக மாதம்பட்டி ரங்கராஜ் தொடுத்த வழக்கை தள்ளுபடி செய்த நீதிமன்றம் | சிம்பு கதையில் ரஜினியா... | ஆண் பாவத்திற்கு பொல்லாதது பின் தமிழ் சினிமா நிலைமை பாவம் | அது நானில்லை : ரகுல் ப்ரீத் சிங் எச்சரிக்கை | தன் பட பூஜையை அர்ஜூன் தாஸ் புறக்கணித்தாரா? | தமிழில் மெலோடி பாடல்கள் குறைந்தது ஏன்?: கங்கை அமரன் | ஹிந்தியில் மீண்டும் தடம் பதிப்பாரா தனுஷ்? |

ஒரு படத்தின் நீளம் இரண்டு மணி நேரம் அல்லது இரண்டரை மணி நேரம் இருந்தால்தான் ரசிகர்கள் பொறுமையாகப் பார்த்து ரசிக்கிறார்கள். மூன்று மணி நேரம் ஓடும் படங்கள் ரசிகர்களின் பொறுமையை சோதிப்பதாகவே உள்ளன.
இதற்கு முன்பு வெளிவந்த 'தி கோட், இந்தியன் 2' ஆகிய படங்களின் நீளம் மூன்று மணி நேரம் ஓடக் கூடிய படங்களாக இருந்தன. அதுவும் அந்தப் படங்களின் வரவேற்பு குறைய முக்கியக் காரணங்கள்தான். 'இந்தியன் 2' படத்தின் நீளம் குறித்து கடும் விமர்சனம் எழுந்ததும் அடுத்த சில நாட்களில் 12 நிமிடக் காட்சிகளை வெட்டி எறிந்தார்கள்.
நேற்று வெளியான 'மெய்யழகன்' படம் 2 மணி நேரம் 57 நிமிடங்கள் ஓடுகிறது. படத்தின் இடைவேளைக்குப் பிறகான பிற்பகுதி மிகவும் நீளமாக இருப்பதாக விமர்சனம் எழுந்துள்ளது. அதிலும் கார்த்தி தன்னைப் பற்றிச் சொல்லும் காட்சிகள் படத்தின் மையக் கதையிலிருந்து விலகியிருப்பதாகப் பலரும் கருத்து தெரிவித்துள்ளார்கள். அதனால், அந்தக் காட்சிகளை நீக்கி விடலாம் எனத் தயாரிப்பு நிறுவனம் சார்பில் இயக்குனரிடம் சொன்னார்களாம்.
ஆனால், படத்தின் இயக்குனர் பிரேம்குமார் அவற்றை நீக்க மாட்டேன், நேரத்தையும் குறைக்க மாட்டேன் என பிடிவாதம் பிடிக்கிறாராம். தெலுங்கில் மட்டும் அந்தக் காட்சிகளைக் கொஞ்சம் குறைத்துள்ளார்களாம். தமிழிலும் அவற்றை நீக்கினால் படத்தைப் பற்றிய நெகட்டிவ் விமர்சனங்கள் குறைய வாய்ப்புண்டு.
இரண்டு படங்களை மட்டுமே இயக்கியள்ள இயக்குனர் இவ்வளவு பிடிவாதம் பிடிக்கக் கூடாது என கோலிவுட்டில் பேசிக் கொள்கிறார்கள்.