தனுஷூக்கு ஜோடியாகும் பூஜா ஹெக்டே! | அஜித் பட ஹீரோயின் யார் | சினிமாவில் நடப்பதை மட்டும் பூதக் கண்ணாடி வச்சு பாக்காதீங்க : குஷ்பு காட்டம் | பழனி முருகன் கோவிலில் குடும்பத்துடன் சாமி தரிசனம் செய்த விக்னேஷ் சிவன் - நயன்தாரா | அர்ஜுன் தாஸ் குரலைப் பாராட்டிய பவன் கல்யாண் | சுதீப் 47 படத்தை இயக்கப் போகும் 'மேக்ஸ்' இயக்குனர் | புதிய சாதனை படைத்த 'ஹரிஹர வீரமல்லு' டிரைலர் | இந்த வாரம் அப்பா, மகள் ; குரு, சிஷ்யன் படங்கள் மோதல் | லவ் மேரேஜ் படம் ஹிட்டா? : கணக்கு சொல்லாத படக்குழு | '96' இரண்டாம் பாகம் : விலக முடிவெடுத்த விஜய் சேதுபதி? |
தெலுங்கு நடிகர் ஜூனியர் என்டிஆர் நடித்த தேவரா என்ற படம் நேற்று திரைக்கு வந்தது. ஹைதராபாத்தில் உள்ள ஒரு தியேட்டரில் ஜூனியர் என்டிஆரின் ரசிகர்கள் கிடா வெட்டி அந்த ரத்தத்தை ஜூனியர் என்டிஆரின் போஸ்டர்கள், கட் அவுட்டுகளில் அபிஷேகம் செய்துள்ளார்கள். இது குறித்த வீடியோக்கள் வெளியானதை அடுத்து ரசிகர்களின் இந்த செயல்பாட்டை நடிகை வேதிகா கடுமையாக கண்டித்துள்ளார்.
அவர் தனது எக்ஸ் தளத்தில் வெளியிட்டுள்ள பதிவில், ‛‛இது மிகவும் கொடுமையான செயல். அந்த பாவப்பட்ட குழந்தைக்காக என்னுடைய இதயம் ரத்தம் சிந்துகிறது. இதுபோன்ற சித்ரவதை கொடுமை யாருக்கும் நடக்கக்கூடாது. குரலற்ற அப்பாவி ஜீவனை இப்படியா வதைப்பது? அந்த அப்பாவிக்காக நான் பிரார்த்திக்கிறேன். அது இறைவனின் கைகளில் தஞ்சம் அடையட்டும். ரசிகர்கள் கொண்டாட்டம் என்பதின் பேரில் இனிமேலும் இதுபோன்று எந்த ஜீவன்களையும் கொல்ல வேண்டாம். தயவு செய்து இத்தோடு நிறுத்திக் கொள்ளுங்கள்'' என்று தெரிவித்து இருக்கிறார் வேதிகா.