இளம் நடிகருடன் காதலா? - கோட் நடிகை விளக்கம் | ஏஆர் ரஹ்மான் பிரிவுக்கும், மோகினி டே பிரிவுக்கும் சம்பந்தம் இல்லை: சாய்ரா பானு வழக்கறிஞர் விளக்கம் | என் மகளை மீட்டு தந்தது செட்டிக்குளங்கரா தேவி தான் : நயன்தாரா அம்மா உருக்கம் | மலையாள வாரிசு வில்லன் நடிகர் மேகநாதன் மறைவு | கிஸ் படத்திலிருந்து அனிரூத் விலகலா? | சம்பந்தி இது சரியில்லை : ‛ராஜாகிளி' பட விழாவில் அர்ஜூன் கலாட்டா | ராம் பொதினேனிக்கு ஜோடியான பாக்யஸ்ரீ போர்ஸ் | சிவகார்த்திகேயனுக்கு வில்லனா? மறுப்பு தெரிவித்த விஷால் | ஹாலிவுட் மியூசிக் மீடியா விருது: ஆடுஜீவிதம் பின்னணி இசைக்காக வென்றார் ஏ.ஆர்.ரஹ்மான் | விஜய் 69வது படத்தில் இணையும் வரலட்சுமி |
தயாரிப்பாளர் ஏஎல் அழகப்பனின் மகன் நடிகர் உதயா. இயக்குனர் விஜய்யின் சகோதரரும் கூட. ‛திருநெல்வேலி, ரா ரா, தலைவா, ஆவிக் குமார், உத்தரவு மகாராஜா' உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார். நடிகர் சங்கத்தில் உறுப்பினராக இருந்த இவர் தற்போது நிரந்தரமாக நீக்கப்பட்டுள்ளார். இது தொடர்பாக சென்னையில் பத்திரிக்கையாளர்களை சந்தித்தார் உதயா.
அவர் கூறுகையில், ‛‛தென்னிந்திய நடிகர் சங்கம் ஒரு பாரம்பரியமான சங்கம், இதில் நான் உறுப்பினராக இருந்ததே பெருமை தான். பாண்டவர் அணி உருவான சமயத்தில் தான், நான் நடிகர் சங்க செயற்குழு உறுப்பினராக போட்டியிட்டு ஜெயித்தேன். அதன்பின் சங்கரதாஸ் அணி உருவான சமயத்தில் அதில் துணை தலைவராக போட்டியிட்டேன். அந்த தேர்தலில் பல குளறுபடிகள் நடந்தது உங்களுக்கு தெரியும். அதன்பின் நடந்த நடிகர் சங்கம் செயற்குழு கூட்டத்தில் நானும் பங்கேற்றேன். அதில் அவர்களை எதிர்த்து போட்டியிட்ட எங்களை ‛வைரஸ்' என நடிகர் சங்க பொதுச் செயலாளர் விஷால் கூறினார். நாங்கள் பெரிதாக எடுத்துக் கொள்ளவில்லை.
விஜய்காந்த் சார் கடனை அடைச்சு தான் நடிகர் சங்கத்தை மீட்டார். திரும்பவும் கடன் வாங்கி தான் பண்ணனுமான்னு கேட்டேன். இதுக்கு என்னை 6 மாதம் தற்காலிகமாக சங்கத்தில் இருந்து நீக்கினார்கள். இந்த தற்காலிக நீக்கம் ஒவ்வொரு ஆறு மாதங்களுக்கும் தொடர்ந்தது. உறுப்பினர்களுக்கு நன்றி கடிதம் எழுதிய இயக்குநர் பாக்யராஜையும் நீக்கம் செய்தனர். இப்போது நிரந்தரமாக என்னை சங்கத்தில் இருந்து நீக்கி உள்ளனர். கேட்டால் பை லா படி நடப்பதாக சொல்கிறார்கள். ஆனால் எதுவுமே முறைப்படி நடக்கவில்லை.
நான் என் உறுப்பினர் உரிமைக்காக நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்திருந்தேன். இவ்வளவு நாள் செயற்குழு கூட்டம் நடந்தது. அப்போது எல்லாம் என்னை நீக்காமல் இப்போது என்னை நீக்குவதற்கான காரணம். நான் தேர்தலில் போட்டியிடுவேன் என்ற பயமா? இவர்கள் செய்வதை பார்க்கும் போது சரத்குமார், ராதாரவியே பரவாயில்லை என்று தோன்றுகிறது. தேர்தலை சந்திக்க தைரியம் இல்லாமல் தான் மூன்று வருடங்கள் நீட்டிப்பு செய்து இருக்கிறார்கள். கண்டிப்பாக தேர்தலை நடத்தியே ஆக வேண்டும்.
நடிகர் நாசர் தலைவராக உள்ளார். ஆனால் அவராலேயே பேச முடியவில்லை. சங்கமே செயல்படாமல் உள்ளது. தேர்தல் வேண்டும் என்று சொன்னால், சொல்கின்ற அனைவரையும் நீக்கம் செய்வீர்களா? நான் என்னை நீக்கம் செய்ததற்கு விளக்கம் கேட்டேன். அதற்கு அவர்கள் மன்னிப்பு கேட்க வேண்டும் என்று கூறுகின்றனர். நான் மன்னிப்பு கேட்கும் அளவிற்கு என்ன தவறு செய்தேன். நல்லவர்கள் உள்ளே வந்து கெட்டவர்கள் வெளியே போய்விட்டார்கள் என்று விஷால் கூறுகிறார். ஆனால் இதில் யார் நல்லவர்கள், கெட்டவர்கள். விஷால் தொடர்ந்து காழ்ப்புணர்ச்சி உடன் செயல்படுகிறார். என்னை பொருத்தமட்டில் காழ்புணர்ச்சி இன்றி நடிகர் சங்கம் ஒற்றுமையுடன் செயல்பட வேண்டும் என்பது என் ஆசை.
இவ்வாறு தெரிவித்தார்.