தமிழுக்கு வரும் சப்தமி கவுடா | டிக்கெட் முன்பதிவில் 1.5 கோடி வசூலித்த மங்காத்தா | பவன் கல்யாண் ஒரு நாள் இந்தியாவின் பிரதமராவார் : சொல்கிறார் நடிகை நித்தி அகர்வால் | அருள்நிதி கையில் 3 படங்கள் : இந்த ஆண்டு அடுத்தடுத்து ரிலீஸ் | லட்சுமிகாந்தன் கொலை வழக்கு படப்பிடிப்பு நிறைவு | ஜனநாயகன் சென்சார் விவகாரம் : இனியாவது வாயை திறப்பாரா விஜய்? | சூரி சொன்ன 'மண்டாடி' கதை | தந்தைக்கு எதிராக வெறுப்பு பேச்சு : கதீஜா ரஹ்மான் கோபம் | ஒரே நேரத்தில் தயாராகும் 34 படங்கள் | பிளாஷ்பேக் : 5 நாளில் படமாக்கப்பட்ட 'பாசம் ஒரு வேசம்' |

கோவையில் வருகிற, 12ம் தேதி கொடிசியா மைதானத்தில், இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜாவின் இசை நிகழ்ச்சி நடைபெறுகிறது. இதுகுறித்து, நடந்த பத்திரிகையாளர்கள் சந்திப்பில், யுவன் சங்கர் ராஜா கூறியதாவது:
ரசிகர்களுக்கு பிடித்தமான பாடல்களை, புதிய முயற்சிகளுடனும் வழங்க திட்டமிட்டுள்ளோம். கோவை ரசிகர்கள் மிகவும் 'வைப்' உணர்வு கொண்டவர்கள். அவர்களின் உணர்வுகள் வாயிலாக தான் நல்ல, நல்ல பாடல்களை என்னால் நிகழ்ச்சியில் பாட முடிகிறது. பழைய பாடல்களை 'ரீமேக்' செய்வதை, மற்றொரு பரிணாமமாக பார்க்கிறேன்.
இதனால் பாடலின் தன்மை கெடாது. ஏ.ஐ., தொழில் நுட்பத்தால் அடுத்த, 10 வருடங்களில் இசையமைப்பாளர்களுக்கு வேலை இருக்காது. ஏ.ஐ., தொழில்நுட்பத்தில் உண்மைத்தன்மை இருக்காது என்று, ஏ.ஆர்.ரகுமான் கூறியது உண்மைதான்.
நடிகர் விஜய் கட்சிக்கு, பாடல் கேட்டால் கண்டிப்பாக அமைத்து தருவேன்.பழைய பாடல்களை பயன்படுத்துவதில், காப்புரிமை பிரச்னை நிச்சயம் வரும். அதனால் முன் அனுமதி பெற்று பாடல்களை பயன்படுத்துவதுதான், சரியானதாக இருக்கும். ரசிகர்களின் கருத்துப்படியே, 'கோட்' திரைப்படத்தில் பாடல்களில் திருத்தம் செய்யப்பட்டது.
இவ்வாறு, கூறினார்.




