அஜித் படத்தை தயாரிக்கும் அஜித் ரசிகர் | டேட்டிங் ஆப் சிக்கல்களை பேசவரும் 'நீ பாரெவர்' | மலையாள இயக்குனர் மீது பாலியல் புகார்: நடிகை கைது | புராணப்படத்தில் நடிக்கும் சமுத்திரகனி | 'ஹரிஹர வீர மல்லு': அவுரங்கசீப் கேரக்டரை மாற்றிய இயக்குனர் | பிளாஷ்பேக்: 3டி படத்தில் நடிக்க மறுத்த ரஜினிகாந்த் | பிளாஷ்பேக்: பெரும் தோல்வி அடைந்த பிரம்மாண்ட படம் | 'கேம் சேஞ்ஜர்' கமெண்ட்: மன்னிப்பு கேட்ட தயாரிப்பாளர் | 'கட்டா குஸ்தி 2' படத்தில் ஐஸ்வர்ய லட்சுமி இருக்கிறாரா? | கண்ணப்பா டீமுக்கும், ஹீரோயினுக்கும் என்ன பிரச்னை |
நடிகர் ஜெயம் ரவி தனது மனைவி ஆர்த்தியை சமீபத்தில் பிரிவதாக அறிவித்தார். மேலும் விவாகரத்து கோரி குடும்பல நல நீதிமன்றத்திலும் மனு தாக்கல் செய்துள்ளார். ‛ஜெயம் ரவியின் இந்த முடிவு தனிச்சையானது, என்னிடம் எதுவும் கலந்து ஆலோசிக்க முடியவில்லை' என கூறியிருந்தார் ஆர்த்தி.
அதேசமயம் செய்தியாளர்களிடம் பேசிய ரவி, ‛‛ஒன்றரை மாதத்திற்கு முன்பே இந்த முடிவை எடுத்து அவருக்கு நோட்டீஸ் அனுப்பி உள்ளேன். ஆனால் தனக்கு தெரியாது என ஏன் அவர் சொல்கிறார் என தெரியவில்லை. குழந்தைகளுக்காக நான் எதுவும் பேச வேண்டாம் என நினைக்கிறேன். நீதிமன்றத்தில் ஒரு நாள் உண்மை வெளிவரும் என்றார். மேலும் பாடகி கெனிஷா உடன் தொடர்புபடுத்தி பேசுவது வருத்தம் அளிப்பதாகவும், இதில் யாரையும் இழுக்காதீர்கள். வாழு வாழவிடு'' என தெரிவித்துள்ளார் ஜெயம் ரவி
இந்நிலையில் நடிகை குஷ்பு வலைதளத்தில் ஜெயம் ரவி பெயரை கூறாமல் மறைமுகமாக ஒரு நீண்ட பதிவு போட்டுள்ளார். அதில், ‛‛தனது குடும்பத்தை மேலாக போற்றுபவன் தான் உண்மையான உயர்ந்த மனிதன். அவனது தேவைகள், ஆசைகள் மற்றவையெல்லாம் இரண்டாம்பட்சம் தான். திருமண வாழ்வில் ஏற்ற, இறக்கங்கள் வரத்தான் செய்யும். தவறுகளும் நடக்கும். அதற்காக ஒரு மனிதன் அவனது குடும்பத்தை விலக்கி வைக்க கூடாது. ஒருக்கட்டத்தில் இருவருக்குமான அன்பு குறையலாம் ஆனால் மரியாதை குறைய கூடாது.
சுயநலமாக நாம் எடுக்கும் முடிவு பெரும்பாலும் பூமராங் போல திரும்பவும் நமக்கே திரும்ப வரும். தனது குழந்தைகளையும் கவனிக்கும் மனைவியை மதிப்பவனே உண்மையான ஆண். அவர்களை விட்டு செல்பவன் நல்ல மனிதன் அல்ல. இதனால் தனது குழந்தைகளும் பாதிக்கப்படுவார்கள் என்பதை அறியாதவர் சுயநலவாதியே. ஒரு தாயை, குறிப்பாக உன்னை நேசித்து ஆதரித்த ஒருவரை அவமரியாதை செய்வது வருத்தமளிக்கிறது. இது இதயத்தை உடைக்கும் இரக்கமற்ற நிலையை வெளிப்படுத்துகிறது.
ஒரு உண்மையான மனிதன் தன்னை உயர்த்துவதற்கு, முதலில் தன் குடும்பத்தை உயர்த்த வேண்டும். உங்களுடன் நிற்பவர்களை மதிப்பதும், உங்கள் உலகத்தை உருவாக்கும் குடும்பத்தை போற்றுவதும் தான் உண்மையான பலம். இது காலத்தால் கூட உடைக்க முடியாத பிணைப்பை ஏற்படுத்தும். மரியாதை என்பது அடிப்படையானது. அது உங்களில் வீட்டிலிருந்து தொடங்க வேண்டும். இந்த உண்மையை ஏற்றுக்கொள்ளாத நபர் அன்பின் பாதையிலிருந்தும் நிறைவான வாழ்க்கையிலிருந்தும் விலகிச் செல்வார்.
இவ்வாறு குஷ்பு தெரிவித்துள்ளார்.
யாருக்கான இந்த பதிவு என நடிகை குஷ்பு குறிப்பிடவில்லை. ஆனால் ஜெயம் ரவிக்கானது தான் ரசிகர்கள் சுட்டிக் காட்டி வருகின்றனர். ஏனென்றால் ஜெயம் ரவி அவரது மனைவி ஆர்த்தியை பிரிந்துள்ளார். ஆர்த்தியின் அம்மாவான தயாரிப்பாளர் சுஜாதா, குஷ்புவின் நெருக்கமான தோழிகளில் ஒருவர் என்பது குறிப்பிடத்தக்கது.