குட் பேட் அக்லி டிரைலர் எப்போது? | பழம்பெரும் ஹிந்தி நடிகர் மனோஜ் குமார் காலமானார் | ஏப்ரல் முதல் வாரம் முழுவதும் நெட்பிளிக்ஸ் ஆதிக்கம் | ரூ.52 கோடி வசூலுடன் வலம் வரும் வீர தீர சூரன் | 'இட்லி கடை' புதிய வெளியீட்டுத் தேதி எப்போது? | 'குட் பேட் அக்லி' முன்பதிவு இன்று முதல் ஆரம்பம் | பாட்டு பாடி, பழைய நினைவுகளை பகிர்ந்து பாரதிராஜாவை தேற்றிய கங்கை அமரன் | பெண் குழந்தைக்கு தந்தையான ரெடின் கிங்ஸ்லி | துருவ நட்சத்திரம் : காத்திருக்கும் விக்ரம் | 25 வயதில் மகன் இருக்கையில் தந்தையாக நடிக்க தயங்கும் ஹீரோக்கள் : சசிகுமார் ஆதங்கம் |
ஒவ்வொரு நடிகருக்கும் ஒவ்வொரு ஆண்டு முக்கியமானதாக இருக்கும். அது அவர்கள் அதிக படங்களில் நடித்த ஆண்டு. அந்த வரிசையில் நடிகர் திலகம் சிவாஜிக்கு 1969ம் ஆண்டு முக்கியமான வருடம். இந்த ஆண்டு அவர் 9 படங்களில் நடித்தார். அந்த படங்கள் வருமாறு:
1.நிறைகுடம்
முக்தா பிலிம்ஸ் தயாரிப்பில், முக்தா சீனிவாசன் இயக்கத்தில் இந்த படம் உருவானது. இயக்குநர் மகேந்திரனின் கதை இது. நடிகர் சோ, திரைக்கதை, வசனம் எழுதினார். சிவாஜி கணேசன், வாணிஸ்ரீ, முத்துராமன், சோ, தேங்காய் சீனிவாசன் உள்ளிட்டோர் நடித்தனர். முக்தா பிலிம்ஸில் சிவாஜி நடித்த முதல் படம் இது.
2. அஞ்சல் பெட்டி 520
சிவாஜி, சரோஜாதேவி, நாகேஷ், தேங்காய் சீனிவாசன் முதலானோர் நடித்து, டி.என்.பாலு இயக்கிய படம். முழுக்க முழுக்க காமெடிக்கு முக்கியத்துவம் கொடுக்கப்பட்டு எடுக்கப்பட்ட படம் இது.
3. அன்பளிப்பு
சிவாஜி, சரோஜாதேவி நடிக்க, ஏ.சி.திருலோகசந்தர் இயக்கத்தில் உருவானது. இந்த படம் தோல்வி அடைந்தது.
4. காவல் தெய்வம்
கே.விஜயன் இயக்கத்தில், உருவான படம். படத்தின் கதையை ஜெயகாந்தன் எழுதியிருந்தார்.
5. குருதட்சனை
சிவாஜியும் பத்மினியும் நடித்து, ஏபி.நாகராஜன் இயக்கத்தில் உருவான படம்.
6. தங்கச் சுரங்கம்
டி.ஆர்.ராமண்ணா இயக்கத்தில் சிவாஜி, பாரதி, வெண்ணிற ஆடை நிர்மலா, எஸ்.வரலட்சுமி, மேஜர் சுந்தர்ராஜன், நாகேஷ் நடித்திருந்தனர்.
7. தெய்வமகன்
சிவாஜியின் புகழ் பெற்ற படமான தெய்வமகன் இந்த ஆண்டு தான் வெளியானது. ஏ.சி.திருலோகசந்தர் இயக்கத்தில் சிவாஜி முதன் முறையாக மூன்று வேடங்களில் நடித்தார்.
8. திருடன்
கே.பாலாஜியின் தயாரிப்பில், கே.ஆர்.விஜயாவுடன் சிவாஜி நடித்த படம்.
9. சிவந்த மண்
ஸ்ரீதர் இயக்கத்தில், சிவாஜி, காஞ்சனா நடித்த படம். முதன் முறையாக வெளிநாட்டில் எடுக்கப்பட்ட சிவாஜி படம்..