வருண் தவானுக்கு ஜோடியாகும் பூஜா ஹெக்டே | சிவகார்த்திகேயன், ஜெயம் ரவியின் புதிய பட பணிகள் துவங்கின | ‛டூரிஸ்ட் பேமிலி' பட டப்பிங் பணியில் சசிகுமார் | திரையுலகில் 22 ஆண்டுகள் : சூர்யா 45 படப்பிடிப்பில் த்ரிஷா கேக் வெட்டி கொண்டாட்டம் | படைதலைவன் படத்தின் டிரைலரில் தனது ஹிட் பாடலுடன் முகம் காட்டிய விஜயகாந்த் | அல்லு அர்ஜுனுக்கு ஆதரவாக குரல் கொடுத்த ராஷ்மிகா - நானி | பிளாஷ்பேக் : விசுவை சினிமா நடிகராக்கிய எஸ்.பி.முத்துராமன் | பிளாஷ்பேக் : கண்ணாம்பா வசனத்தால் தோல்வி அடைந்த படம் | 'கொரோனா குமார்' வழக்கு முடித்து வைப்பு | லண்டன் இசை பள்ளியின் கவுரவத் தலைவராக ஏ.ஆர்.ரஹ்மான் நியமனம் |
தமிழ், தெலுங்கு சினிமாவில் சில வருடங்களுக்கு முன்பு வரை முன்னணி கதாநாயகிகளில் ஒருவராக இருந்தவர் அனுஷ்கா. 'பாகுபலி' படம் அவருக்குப் பெரும் திருப்புமுனையாக அமைந்தது. அதன்பின் நிறைய படங்களில் நடிப்பார் என்று எதிர்பார்த்தால் கடந்த ஏழு வருடங்களில் 'பாகமதி, சைலன்ஸ், மிஸ் ஷெட்டி மிஸ்டர் பொலிஷெட்டி' ஆகிய மூன்று படங்களில் மட்டுமே நடித்துள்ளார். 'இஞ்சி இடுப்பழகி' படத்திற்காக உடல் எடையைக் கூட்டிய பின் அதை அவரால் மீண்டும் குறைக்க முடியவில்லை என்று சொல்லப்பட்டது. 'பாகுபலி 2' படத்தில் கூட கிராபிக்ஸ் மூலம் அவரது தோற்றத்தை சரி செய்தார்கள் என்றும் சொன்னார்கள்.
தெலுங்கின் முன்னணி இயக்குனர்களில் ஒருவரான கிரிஷ் இயக்கத்தில் 'காட்டி' என்ற படத்தில் நடிக்க ஒப்பந்தமாகியிருந்தார் அனுஷ்கா. கடந்த மார்ச் மாதம் இப்படத்திற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியானது. அதற்கு முன்பாகவே ஜனவரி மாதத்தில் சில நாட்கள் மட்டும் நடந்த படப்பிடிப்பு அத்துடன் நிறுத்தப்பட்டது. தற்போது ஹைதராபாத்தில் மீண்டும் படப்பிடிப்பை ஆரம்பித்துள்ளார்களாம். ஆந்திரா, ஒடிஷா எல்லையில் கஞ்சா கடத்தல் பற்றிய கதையாக இப்படம் உருவாகி வருகிறது என்பது தகவல். 'வேதம்' படத்திற்குப் பிறகு 14 வருட இடைவெளியில் மீண்டும் இணைகிறது கிரிஷ் - அனுஷ்கா கூட்டணி.