அஜித் படத்தை தயாரிக்கும் அஜித் ரசிகர் | டேட்டிங் ஆப் சிக்கல்களை பேசவரும் 'நீ பாரெவர்' | மலையாள இயக்குனர் மீது பாலியல் புகார்: நடிகை கைது | புராணப்படத்தில் நடிக்கும் சமுத்திரகனி | 'ஹரிஹர வீர மல்லு': அவுரங்கசீப் கேரக்டரை மாற்றிய இயக்குனர் | பிளாஷ்பேக்: 3டி படத்தில் நடிக்க மறுத்த ரஜினிகாந்த் | பிளாஷ்பேக்: பெரும் தோல்வி அடைந்த பிரம்மாண்ட படம் | 'கேம் சேஞ்ஜர்' கமெண்ட்: மன்னிப்பு கேட்ட தயாரிப்பாளர் | 'கட்டா குஸ்தி 2' படத்தில் ஐஸ்வர்ய லட்சுமி இருக்கிறாரா? | கண்ணப்பா டீமுக்கும், ஹீரோயினுக்கும் என்ன பிரச்னை |
லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடிப்பில் உருவாகி வரும் திரைப்படம் 'கூலி'. அனிரூத் இசையமைக்கும் இப்படத்தில் சவுபின் சாஹிர், நடிகர் நாகர்ஜூனா, ஸ்ருதிஹாசன், சத்யராஜ் உள்ளிட்ட பல பிரபலங்கள் இணைந்து நடிக்கின்றனர். ஏற்கனவே இதன் முதற்கட்ட படப்பிடிப்பு சென்னையில் முடிவடைந்தது. கடந்த வாரத்தில் இருந்து விசாகப்பட்டினத்தில் படப்பிடிப்பு நடைபெற்று வருகிறது.
இந்த நிலையில் நேற்று திடீரென சமூக வலைதளங்களில் கூலி படத்தின் படப்பிடிப்பில் நாகார்ஜூனா சண்டைக்காட்சி படமாக்கப்பட்ட வீடியோ ஒன்று வைரலானது. இதைத்தொடர்ந்து லோகேஷ் கனகராஜ் அவரது எக்ஸ் பக்கத்தில் இது குறித்து வருத்தத்துடன் ஒரு பதிவு போட்டுள்ளார். அதில், "இரண்டு மாதங்களாக எங்கள் படக்குழுவினர் கடுமையாக உழைத்து எடுத்த காட்சியை ஒரு வீடியோ மூலம் கசியவிட்டு வீணாக கெடுக்கிறார்கள். தயவு செய்து இதுபோன்ற விஷயங்களை பகிரவோ, ஆதரவோ தர வேண்டாம் என கேட்டுக் கொள்கிறேன்'' என குறிப்பிட்டுள்ளார்.