'பெத்தி' படத்திலிருந்து ஜான்வி கபூர் முதல் பார்வை வெளியானது! | ‛மேயாத மான்' ரத்னகுமார் படத்தை தயாரிக்கும் இயக்குனர்கள்! | வாரிசு பட இயக்குனரின் அடுத்த படத்தில் நடந்த ட்விஸ்ட்! | கமல் பிறந்தநாளில் ரஜினி ரசிகர்களுக்கு சர்ப்ரைஸ்! | டப்பிங்கில் இவ்வளவு விஷயங்களா? விளக்குகிறார் ஷ்யாம் குமார் | பீதியில் புரோட்டா காமெடியன் | 'டீசலுக்கு' வரவேற்பு உண்டு வருவாய் இல்லை: இயக்குனர் சண்முகம் | பிளாஷ்பேக்: திரைப் பிரபலங்களின் மாற்றத்திற்கு காரணியாய் இருந்த “ஸ்ரீமுருகன்” | ரசிகர் கொலை வழக்கில் நவ-6ல் நடிகர் தர்ஷன் உள்ளிட்ட அனைவரிடமும் வீடியோ கான்பரன்ஸ் விசாரணை | கேரள மாநில திரைப்பட அகாடமி தலைவராக ரசூல் பூக்குட்டி தேர்வு |

தமிழ் திரைப்படத் தயாரிப்பாளர் சங்கம் சார்பில் சில வாரங்களுக்கு முன்பு ஒரு அறிவிப்பு வெளியானது. விஷால், தனுஷ் ஆகியோரை வைத்து புதிதாகப் படங்களைத் தயாரிக்க உள்ளவர்கள் சங்கத்தை அணுகி ஆலோசனை கேட்க வேண்டும் என்று அதில் குறிப்பிடப்பட்டிருந்தது. இது அவர்கள் மீதான மறைமுகத் தடை விதிக்கும் ஏற்பாடு என்ற சர்ச்சை எழுந்தது.
இதன்பின் விஷால் தரப்பிலிருந்து பதிலுக்கு அறிவிக்கை ஒன்று வெளியானது. ஆனால், தனுஷ் அமைதி காத்து வந்தார். தற்போது தயாரிப்பாளர் சங்கத்தின் தலைவராக உள்ள முரளி ராமசாமி தயாரிப்பில் தனுஷ் நடிக்க ஒரு படம் ஆரம்பமாகி பின் நின்று போனது. அடுத்து செயலாளராக இருக்கும் கதிரேசன் தயாரிக்க உள்ள ஒரு படத்தில் தனுஷ் கதாநாயகனாக நடிக்க அட்வான்ஸ் வாங்கி நடித்துக் கொடுக்காமல் இருந்ததால்தான் அவர் மீது குற்றச்சாட்டு வைக்கப்பட்டது.
இதையடுத்து நடிகர் சங்கத்தின் சார்பில் தயாரிப்பாளர் சங்கத்திடம் பேச்சுவார்த்தை நடந்தது. அதில் எடுக்கப்பட்ட சுமூகமான முடிவுகளை அடுத்து தனுஷ் விவகாரம் முடிவுக்கு வந்தது. அதைத் தொடர்ந்து தனுஷ் அறிக்கை ஒன்றையும் வெளியிட்டார்.
இதன் காரணமாக தனுஷ் நடிக்கும் 52வது படத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்பு இன்று வெளியாகி உள்ளது. டான் பிக்சர்ஸ் என்ற புதிய படத் தயாரிப்பு நிறுவனம் சார்பாக ஆகாஷ் பாஸ்கரன் என்பவர் இப்படத்தைத் தயாரிக்கிறார்.