பிரபாஸ் படத்திலிருந்து நீக்கப்பட்டாரா ராஷ்மிகா? | விஜய் சேதுபதி படத்தில் தபு : அதிகாரப்பூர்வ அறிவிப்பு | கண்ணப்பா படத்தின் புதிய ரிலீஸ் தேதி அறிவிப்பு | 'ரெட்ரோ'வில் 90களின் காதல் கதை : கார்த்திக் சுப்பராஜ் தகவல் | பிளாஷ்பேக் : இளையராஜாவின் பாடலுக்காக உருவான படம் | சினிமா சங்கப் பிரச்னைகளில் அரசு தலையிட வேண்டும் : ஆர்கே செல்வமணி கோரிக்கை | உறுதியானது 'லியோ - குட் பேட் அக்லி' ஒற்றுமை | தனுஷ் - மாரி செல்வராஜ் கூட்டணி : மாறிய தயாரிப்பு நிறுவனம் | ஷங்கர் வழியில் எக்ஸ் தளத்தை 'ஆப்' செய்த ஏஆர் முருகதாஸ் | ஆளே இல்லாத வீட்டிற்கு ஒரு லட்சம் கரண்ட் பில் : கங்கனா ஏற்படுத்திய பரபரப்பு |
சினிமா பிரபலங்கள், அரசியல் பிரபலங்கள் ஆகியோரது தனிப்பட்ட வாழ்க்கையும் சில நேரங்களில் விமர்சனங்களில் சிக்கும் சூழ்நிலை உருவாகிறது. முன்பெல்லாம் சினிமா பிரபலங்களின் திருமண வாழ்க்கை சரியாக அமையவில்லை என்றால் அடுத்த சில வருடங்களில் பிரிந்துவிடுவார்கள். ஆனால், சமீபத்திய சில நடிகர்களின் பிரிவுகள் அவர்களது பத்து ஆண்டுகளுக்கும் மேலான திருமண வாழ்க்கைக்குப் பிறகு நடப்பது அவர்களது ரசிகர்களை அதிர்ச்சியடைய வைத்துள்ளது.
நடிகர் தனுஷ், நடிகர் ரஜினிகாந்தின் மூத்த மகள் ஐஸ்வர்யா இருவரும் இருவரும் காதலித்து, பெற்றோர் சம்மதத்துடன் 2004ம் ஆண்டு திருமணம் செய்து கொண்டார்கள். பல சினிமா பிரபலங்கள், அரசியல் பிரபலங்கள் கலந்து கொண்ட பிரம்மாண்ட திருமணமாக அது நடைபெற்றது. இரண்டு வருடங்களுக்கு முன்னர் தங்களது 18 வருட திருமண வாழ்க்கையிலிருந்து திடீரெனப் பிரிவதாக அறிவித்தார்கள். இவர்களுக்கு டீன் ஏஜ் வயதில் இரண்டு மகன்கள் இருக்கிறார்கள்.
இசையமைப்பாளர், நடிகர் ஜிவி பிரகாஷ், பின்னணிப் பாடகி சைந்தவி இருவரும், அவர்கள் பள்ளியில் ஒன்றாகப் படித்த காதலித்திலிருந்தே காதலித்து வந்தார்கள் என்பதை பல பேட்டிகளில் சொல்லியிருக்கிறார்கள். 2013ல் பெற்றோர் சம்மதத்துடன் திருமணம் செய்து கொண்டவர்கள், 11 வருடங்களுக்குப் பிறகு இந்த வருடம் மே மாதம் பிரிவதாக அறிவித்தார்கள். திருமண வாழ்க்கைக்குதான் 11 வருடங்கள், காதல் வாழ்க்கை 20 வருடங்களுக்கும் மேலாக இருந்திருக்கும். இருவருக்கும் 4 வயதில் ஒரு மகள் இருக்கிறார்.
நடிகர் ஜெயம் ரவி, டிவி சீரியல் தயாரிப்பாளர் சுஜாதா விஜயகுமார் மகள் ஆர்த்தி இருவரும் காதலித்து 2009ம் ஆண்டு திருமணம் செய்து கொண்டார்கள். சில மாதங்களாக இருவரும் பிரியப் போகிறார்கள் என்ற கிசுகிசு பரவியிருந்தது. இரு தரப்பினரும் அதற்கு மறுப்பு தெரிவிக்கவில்லை. இந்நிலையில் இன்று அந்தப் பிரிவை அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார் ஜெயம் ரவி. 15 வருடங்கள் வாழ்ந்த திருமண வாழ்க்கை முடிவுக்கு வந்துள்ளது. இவர்களுக்கு இரண்டு மகன்கள் இருக்கிறார்கள்.
பத்துப், பதினைந்து வருடங்கள் ஆன திருமண வாழ்க்கை, அன்பான குழந்தைகள் என இருக்கும் சினிமா பிரபலங்களின் பிரிவு அவர்களது ரசிகர்கள் மத்தியில் ஏதோ ஒரு விதத்தில் தாக்கத்தை ஏற்படுத்தும் வாய்ப்புள்ளது.