டிரெயின்-ல் ஸ்ருதிஹாசன் பாடிய கன்னக்குழிக்காரா | ரஜினிக்காக மட்டுமே அதை செய்தேன் : சொல்கிறார் உபேந்திரா | மறு தணிக்கைக்கு செல்லும் பராசக்தி | வருட இறுதியில் ஓடிடியில் மகிழ்விக்க வரிசைக்கட்டும் 'புதுப்படங்கள்'..! | குரு சோமசுந்தரம், அனுமோல் இணைந்து நடிக்கும் பாரிஸ் கபே | ஜனநாயகன் படத்தை தெலுங்கில் வெளியிடும் பிரபல நிறுவனம் | ‛ஆசாத் பாரத்' பற்றி நெகிழும் இந்திரா திவாரி | ஜெயிலர் 2 படத்தில் ஷாருக்கான் : உறுதிசெய்த பாலிவுட் நடிகர் | விஜய்யின் வளர்ச்சியை தடுக்க நினைக்கின்றனர் : நடிகை மல்லிகா | இம்மார்ட்டல் படத்தின் டீசர் எப்படி இருக்கு |

ஞானவேல் இயக்கத்தில் ரஜினி நடித்துள்ள ‛வேட்டையன்' படம் அடுத்தமாதம் அக்., 10ம் தேதி திரைக்கு வருகிறது. ரஜினி உடன் அமிதாப் பச்சன், பஹத் பாசில், ராணா, மஞ்சு வாரியர், துஷாரா விஜயன், ரித்திகா சிங் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். போலீஸ் தொடர்புடைய கதையில் அதிரடி ஆக் ஷன் படமாக தயாராகி உள்ளது. அனிருத் இசையமைக்கும் இந்த படத்தில் இருந்து முதல்பாடலாக 'மனசிலாயோ' என்ற மலையாள ஸ்டைலிலான பாடலை வெளியிட்டுள்ளனர். சூப்பர் சுப்பு, விஷ்ணு எடவன் எழுதி உள்ள இந்த பாடலை மறைந்த பின்னணிப் பாடகர் மலேசியா வாசுதேவனின் குரலை ஏஐ தொழில்நுட்பம் மூலம் பாட வைத்துள்ளனர். அவரின் மகன் யுகேந்திரன், அனிருத் மற்றும் தீப்தி சுரேஷ் ஆகியோரும் இணைந்து பாடி உள்ளனர். அதிரடி துள்ளல் பாடலாக மலையாள ஸ்டைலில் வெளியாகி உள்ள இந்த பாடலுக்கு ஒரு மணிநேரத்தில் 5 லட்சத்திற்கும் அதிகமான பார்வைகள் யுடியூப் தளத்தில் கிடைத்தன.