சிம்பொனி இசை: பிரதமர் மோடியை நேரில் சந்தித்து வாழ்த்து பெற்ற இளையராஜா | 'வாகா' நடிகை ரன்யா ராவ் வழக்கில் திடீர் திருப்பம் | 'லாக்டவுன்' படம் 'லாக்' ஆகி விட்டதா ? | திட்டமிட்டபடி படப்பிடிப்பை முடிக்கும் லோகேஷ் கனகராஜ் | மீண்டும் ஹீரோவான 'பன்னீர் புஷ்பங்கள் ' சுரேஷ் | நயன்தாரா படத்தை ஓடிடியில் வெளியிடுவது ஏன்? : இயக்குனர் விளக்கம் | கதை நாயகன் ஆன இயக்குனர் ஜெகன் | கராத்தே ஹுசைனிக்கு தமிழக அரசு 5 லட்சம் உதவி | பிளாஷ்பேக்: மோசமான தோல்வியை சந்தித்த ரஜினி படம் | பிளாஷ்பேக் : கிருஷ்ணராக நடித்த நடிகை |
'96' படத்தை இயக்கிய பிரேம்குமார் இயக்கத்தில், கோவிந்த் வசந்தா இயக்கத்தில், கார்த்தி, அரவிந்த்சாமி, ஸ்ரீதிவ்யா மற்றும் பலர் நடிக்கும் 'மெய்யழகன்' படம் இந்த மாதம் செப்டம்பர் 27ம் தேதி வெளியாக உள்ளது. இப்படத்திற்கான டீசர் இரு தினங்களுக்கு முன்பு வெளியானது.
டீசர் என்பது ஆங்கில வார்த்தை, அதற்கு 'கிளர்வோட்டம்' என்று தமிழில் பெயர் வைத்து அதைத்தான் அவர்களது போஸ்டர்களிலும் குறிப்பிட்டுள்ளனர். அது மட்டுமல்லாது படத்தின் வெளியீட்டுத் தேதியை தமிழ் மாத கணக்குப்படி 'புரட்டாசி 11' வெளியீடு என்றும் டீசரின் கடைசியில் சேர்த்துள்ளனர்.
டீசர், டிரைலர், போஸ்டர், பர்ஸ்ட் லுக், வியூஸ், பர்ஸ்ட் சிங்கிள் என பல ஆங்கில வார்த்தைகள் தமிழ் சினிமா விளம்பரங்களில் பயன்படுத்தப்பட்டு வருகிறது. 'பர்ஸ்ட் லுக்' என்பதற்கு 'முதல் பார்வை', வியூஸ் என்பதற்கு 'பார்வை' என்ற பொருத்தமான வார்த்தைகள் மட்டும் பழக்கத்தில் உள்ளது.
டீசர், டிரைலர் ஆகியவற்றிற்கு முன்னோட்டம் என்று சிலர் குறிப்பிடுவர். ஆனால், 'மெய்யழகன்' குழு டீசருக்கு 'கிளர்வோட்டம்' என தமிழில் வைத்துள்ளது. அடுத்து 'டிரைலர்' வெளியிடும் போது என்ன சொல்லப் போகிறார்கள் என்று பொறுத்திருந்து பார்ப்போம். மக்களின் பயன்பாட்டில் எந்த வார்த்தை வருகிறதோ அதுதான் நிலைத்து நிற்கும்.