லோகேஷ் கனகராஜ் ஜோடியாகும் ‛ஜெயிலர்' பட நடிகை | 15வது திருமண நாளை கொண்டாடிய சிவகார்த்திகேயன் - ஆர்த்தி | குடும்பத்துடன் விநாயகர் சதுர்த்தி கொண்டாடிய சல்மான்கான் | ஹன்சிகாவின் விநாயகர் சதுர்த்தி கொண்டாட்டம் | டூரிஸ்ட் பேமிலி இயக்குனருக்கு ஜோடியான அனஸ்வரா ராஜன் | கோலி சோடா தொடர்ச்சி... புதிய பாகத்தின் தலைப்பு அறிவிப்பு | சமுத்திரக்கனி, கவுதம் மேனனின் ‛கார்மேனி செல்வம்' | ஷாலினி பிறந்தநாளுக்கு ரீ ரிலீஸ் ஆகும் ‛அமர்க்களம்' | ஷரிதா ராவ் நடிக்கும் புதிய படம் | நல்லகண்ணுவை சந்தித்து நலம் விசாரித்த சிவகார்த்திகேயன் |
வெங்கட் பிரபு இயக்கத்தில் விஜய் நடித்துள்ள கோட் திரைப்படம் வரும் செப்டம்பர் 5ம் தேதி ரிலீஸ் ஆக இருக்கிறது. இந்த படத்தில் விஜய்யுடன் நீண்ட நாளைக்கு பிறகு யுவன் சங்கர் ராஜா கூட்டணி சேர்ந்துள்ளார். மேலும் நடிகர்கள் பிரபுதேவா, பிரசாந்த், மோகன் என பல நட்சத்திரங்கள் இதில் இணைந்து நடித்துள்ளனர். அது மட்டுமல்ல நடிகர் விஜயகாந்த்தும் செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தின் மூலம் ஒருசில காட்சிகளில் வந்து செல்கிறார் என்பதும் சமீபத்தில் உறுதி செய்யப்பட்டுள்ளது.
ஏற்கனவே அஜித்தை வைத்து மங்காத்தா என்கிற படத்தை இயக்கிய வெங்கட் பிரபு, அந்த சமயத்தில் விஜய், அஜித் இருவரையும் சந்திக்க வைத்து அவர்களது நட்பை இருதரப்பு ரசிகர்களுக்கும் பறைசாற்றியவர். அதனால் இந்த படம் விஜய் நடிக்கும் கடைசி படத்திற்கு முந்திய படம் என்பதால் நட்புரீதியாக அஜித்தை இந்த படத்தில் ஏதோ ஒரு விதத்தில் பங்களிக்க செய்திருப்பார் என்றும் சொல்லப்பட்டு வந்தது.
இந்த நிலையில் வெங்கட் பிரபுவின் ஆஸ்தான நடிகர்களில் ஒருவரான வைபவும் இந்த படத்தில் நடித்துள்ளார். அவர் தற்போது கோட் படம் பற்றி கூறும்போது இந்த படத்தின் இரண்டாம் பாதியில் ஒரு முக்கியமான காட்சியில் அஜித்தின் பிரபல வசனம் ஒன்றை விஜய் பேசி நடித்துள்ளார். அந்த வசனமும் காட்சியும் வரும்போது அரங்கமே அதிர போகிறது என்று ஒரு சஸ்பென்சை உடைத்துள்ளார்.