இப்ப, தமிழ் சினிமாவில் டாப் 5 ஹீரோயின் யார் தெரியுமா? | சூர்யாவின் ‛கருப்பு' ரிலீஸ் எப்போது? | ராஷ்மிகாவின் ‛மைசா' படத்தில் இணையும் புஷ்பா 2 வில்லன் | பராசக்தி படப்பிடிப்பு முடிவடைந்தது | நவம்பர் 21-ல் ரீரிலீஸ் ஆகும் ப்ரண்ட்ஸ் | லாபத்தில் முதலில் நுழைந்த 'பைசன்' | தீபாவளிக்கு ஜனநாயகன் அப்டேட் ஏனில்லை | பொங்கலுக்கு நடிகர் சங்க கட்டடம் திறப்பு : விஷால் திருமணம் எப்போது | பிக்பாஸில் வந்து விட்டால் மட்டும் நடிகையாகி விட முடியாது: தர்ஷிகா | ஹீரோயின் ஆனார் 'அரண்மனை' ஹர்ஷா |
வெங்கட் பிரபு இயக்கத்தில் விஜய் நடித்துள்ள படம் கோட். செப்டம்பர் ஐந்தாம் தேதி திரைக்கு வரும் இந்த படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசை அமைத்திருக்கிறார். வெங்கட் பிரபு அளித்த ஒரு பேட்டியில் கோட் படத்தின் கதை குறித்து கூறும் போது, இந்த படத்தின் கதையை டிரைலரிலேயே சொல்லி விட்டேன். என்றாலும் அதை யாரும் கண்டுபிடிக்கவில்லை. அதோடு இந்த படத்தின் காட்சிகள் அடுத்து என்ன நடக்கப் போகிறது என்பதை யூகிக்க முடியாத அளவுக்கு இருக்கும். அப்படிப்பட்ட ஒரு திரைக் கதையை உருவாக்கி இருக்கிறேன். அஜித் நடிப்பில் நான் இயக்கிய மங்காத்தா துரோகத்தை வெளிப்படுத்தும் கதையில் உருவாகியிருந்தது. ஆனால் இந்த கோட் படத்தை காந்தி என்ற நபரின் வாழ்க்கையில் நடந்த ஒரு குடும்ப கதையில் உருவாக்கி இருக்கிறேன். மங்காத்தா படத்தை விட இந்த கோட் படம் சிறப்பானதாக இருக்கும் என்று தெரிவித்திருக்கிறார் வெங்கட் பிரபு.