2025 கூகுள் சர்ச் : 3வது இடத்தில் 'கூலி' | வா வாத்தியார் படத்தின் டிரைலர் வெளியானது | மலேசியாவில் ரசிகர்களுடன் புகைப்படம் எடுத்த அஜித் | ஜனநாயகன் படத்தின் சாட்டிலைட் உரிமையை வாங்கிய ஜீ தமிழ் | டிசம்பர் 9 முதல் 'அரசன்' படப்பிடிப்பு : சிம்பு கொடுத்த தகவல் | ஜி.வி.பிரகாஷின் அடுத்த படம் ஹேப்பிராஜ் | கடந்த சில வாரங்களாக காற்று வாங்கும் தமிழ் சினிமா | புதுமுகங்களின் மாயபிம்பம் | மீண்டும் நாயகியாக நடிக்கும் ரக்சிதா | அவதார் புரமோசன் நிகழ்வில் அர்னால்ட் |

பிரபல வீஜே மணிமேகலை மீடியாவின் தனது இரண்டாவது இன்னிங்சில் குக் வித் கோமாளி நிகழ்ச்சியின் மூலம் அதிகமாக ஸ்கோர் செய்தார். காமெடியில் கலக்கிய அவர் தற்போது சொந்தமாக யூ-டியூப் சேனல் வைத்திருக்கிறார். அவரும் தனது தினசரி நாளினை யூ-டியூபில் ஆரம்பித்து யூ-டியூபிலே முடித்துக் கொள்ளும் அளவிற்கு வீடியோக்களை அப்லோட் செய்து தள்ளிவிடுகிறார்.
இந்நிலையில் தற்போது அவர் தனது சோஷியல் மீடியாவில் வெளியிட்டுள்ள வீடியோவை பார்த்து பலரும் அவரை கலாய்த்து வருகின்றனர். அவர் வெளியிட்டுள்ள அந்த பதிவில், 'பாஸ்போர்ட் ஆபிஸில் 2 மணி நேரம் பட்ட அவமானம் இருக்கே? நீங்கள் யாராவது இப்படி அவமானப்பட்டிருக்கிறீர்களா?' என கேப்ஷன் போட்டு தனது செருப்பு கால்களை காட்டுகிறார். அதில் பார்த்தால் இரண்டு கால்களிலும் வெவ்வேறு செருப்புகளுடன் பாஸ்போர்ட் ஆபிஸுக்கு சென்றிருக்கிறார். இதை பார்த்த ரசிகர்கள் 'நிஜ வாழ்க்கையிலும் கோமளித்தனம் பண்ண ஆரம்பிச்சிட்டீங்களா?' என அவரை கலாய்த்து வருகின்றனர்.