‛காட்டி' புரமோஷனுக்கு வராமல் எக்ஸ் தளத்தில் 'சாட்டிங்' மட்டும் செய்த அனுஷ்கா | வெளியான இரண்டு மாதங்களுக்குப் பிறகு ஓடிடியில் 'கண்ணப்பா' | மேற்கத்திய நாடுகள் பிரச்னையைப் பேசும் 'மதராஸி' | காதலனுக்காக தயாரிப்பாளரான நடிகை | அதிக வேலையால் வாழ்க்கையை இழந்தேன்: ஏ.ஆர்.ரஹ்மான் வேதனை | பிளாஷ்பேக்: நறுக் வசனத்தில் முதல் படம் | பிளாஷ்பேக்: முதல் படமே தோல்வி: துவண்டுபோன சவுகார் ஜானகி | பாலா நடித்த காந்திகண்ணாடி படம்: ம.கா.பா ஆனந்த், பிரியங்கா சொன்னது என்ன? | 50 ஆண்டு கொத்தடிமை,, தஞ்சை பின்னணியில் நடக்கும் கதை | மதராஸியை நம்பியிருக்கும் முருகதாஸ் |
சின்னத்திரை பிரபலங்கள் இடையே நாள்தோறும் வளர்பிறையாய் வளர்ந்து கொண்டிருக்கிறது மணிமேகலையின் பஞ்சாயத்து. மணிமேகலை பிரியங்காவுக்கு இடையே நடந்த பிர்சனையானது தற்போது மணிமேகலைக்கும், பிரியங்கா ஆதரவாளர்கள் மற்றும் விஜய் டிவி பிரபலங்களுக்கும் இடையே நடக்கும் பிரச்னையாக மாறிவிட்டது.
இந்நிலையில், கடந்த சனிக்கிழமை மணிமேகலை வெளியிட்ட வீடியோ ஒன்றில் சிலரை குறிவைத்து 'சொம்புகள்' என்று கிண்டலடித்திருந்தார். இதற்கு பதிலடி கொடுத்துள்ள மா.க.பா ஆனந்த், 'சனிக்கிழமை எல்லாரும் பீரியா இருப்பாங்க. சோ வீடியோ போடும். வாங்க செருப்பு போட்டோ தான் இருக்கு' என பதிவிட்டு செருப்பு புகைப்படத்தை போட்டிருந்தார்.
இதனை தொடர்ந்து டிஜே ப்ளாக்கும் செருப்பு மற்றும் துடைப்பம் புகைப்படத்தை வெளியிட்டு 'நம்மை சுற்றியிருக்கும் அமானுஷ்யங்களை தவிர்ப்பது நல்லது' என்று பதிவிட்டுள்ளார்.
மேலும், குக் வித் கோமாளி பிரபலமான சரத் அண்மையில் அளித்த பேட்டியில், 'மணிமேகலை இந்த பிரச்னையை வைத்து வீடியோ வெளியிட்டு சம்பாதிக்கிறார்' என விமர்சித்துள்ளார்.
இவ்வாறாக பல விஜய் டிவி பிரபலங்களும் மணிமேகலையை வறுத்தெடுத்து வருகின்றனர். அதேசமயம் ரசிகர்களோ மணிமேகலைக்கு ஆதரவாக கருத்து தெரிவித்து வருகின்றனர்.