சின்னத்திரையில் துணை நடிகையாக பயணித்துக் கொண்டிருப்பவர் ஜெனிபர் பெரியநாயகம். ‛செம்பருத்தி, மிஸ்டர் மனைவி' ஆகிய தொடர்களில் முக்கிய கதாபாத்திரத்தில் இடம்பிடித்துள்ளார். சோஷியல் மீடியாவில் ஓரளவு செல்வாக்கு பெற்றுள்ள ஜெனிபர் அவ்வப்போது போட்டோஷூட்களையும் வெளியிட்டு வந்தார்.
இந்நிலையில், ஜிம்முக்கு சென்று பிட்னஸ் மெயிண்டெயின் செய்து வரும் ஜெனிபர் தனது பிட்னஸை காட்டும் வகையில் சில கவர்ச்சியான புகைப்படங்களை வெளியிட்டுள்ளார். அந்த புகைப்படங்கள் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.