பாட்டு பாடி, பழைய நினைவுகளை பகிர்ந்து பாரதிராஜாவை தேற்றிய கங்கை அமரன் | பெண் குழந்தைக்கு தந்தையான ரெடின் கிங்ஸ்லி | துருவ நட்சத்திரம் : காத்திருக்கும் விக்ரம் | 25 வயதில் மகன் இருக்கையில் தந்தையாக நடிக்க தயங்கும் ஹீரோக்கள் : சசிகுமார் ஆதங்கம் | அருண் விஜய் படத்திற்கு பாடல் பாடிய தனுஷ் | அமெரிக்காவில் ஏப்., 9ல் குட் பேட் அக்லி பிரீமியர் காட்சி | முதல் கடார் என் சினிமாவை மூடியது... இண்டாவது கடார் திறந்து வைத்தது : சன்னி தியோல் | அண்ணன் கடனை என்னால் அடைக்க முடியாது: கோர்டில் நடிகர் பிரபு தகவல் | பிளாஷ்பேக்: சமகாலத்தில் எடுக்கப்பட்டு சாதனையையும், வேதனையையும் சந்தித்த இரண்டு “ஞானசௌந்தரி”கள் | 'ரெட்ரோ' டப்பிங் பணிகளை நிறைவு செய்த சூர்யா |
தென்னிந்திய நடிகர் சங்கத்திற்கும், தமிழ் திரைப்படத் தயாரிப்பாளர் சங்கத்திற்கும் இடையில் தற்போது மோதல் போக்கு ஏற்பட்டுள்ளது. சமீபத்தில் தனுஷ் மற்றும் 5 நடிகர்கள், தயாரிப்பாளர்களிடம் முன் பணம் பெற்றுக் கொண்டு நடிக்காமல் இருக்கிறார்கள். அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க இருக்கிறோம் என்றும் பல்வேறு பிரச்சினைகளுக்காக முழு வேலை நிறுத்தம் செய்ய இருக்கிறோம் என்று தயாரிப்பாளர் சங்கம் அறிவித்தது. எங்களை கேட்காமல் இப்படி ஒரு முடிவை எடுத்து தவறு என்ற நடிகர் சங்கம் பதிளித்தது.
இந்த நிலையில் இதுகுறித்து ஆலோசிக்க நேற்று நடிகர் சங்க ஆலோசனை கூட்டம் சங்க தலைவர் நாசர் தலைமையில் நடந்தது. பொருளாளர் கார்த்தி, துணைத்தலைவர்கள் பூச்சி முருகன், கருணாஸ் மற்றும் விஜய்சேதுபதி, ஆர்யா, பிரசாந்த், விஜய் ஆண்டனி, தியாகராஜன், சிபிராஜ், கவுதம் கார்த்திக், ராஜ் கிரண், யோகிபாபு, நடிகைகள் லதா, ரோகிணி, கோவை சரளா, குட்டி பத்மினி, உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
இந்த கூட்டத்தில் தயாரிப்பாளர் சங்கம் அறிவித்துள்ள சினிமா ஸ்டிரைக், நடிகர் நடிகைகள் சம்பள குறைப்பு உள்ளிட்ட பல விஷயங்கள் குறித்து ஆலோசிக்கப்பட்டது. ஆனாலும் எந்த ஒரு உறுதியான முடிவும் எடுக்காமல் கலைந்தது. விரைவில் முடிவுகள் அறிவிக்கப்படும் என்று தெரிவித்தனர்.