ஷாலினி பிறந்தநாளுக்கு ரீ ரிலீஸ் ஆகும் ‛அமர்க்களம்' | ஷரிதா ராவ் நடிக்கும் புதிய படம் | நல்லகண்ணுவை சந்தித்து நலம் விசாரித்த சிவகார்த்திகேயன் | நிவேதா பெத்துராஜுக்கு திருமணம் | 'திரெளபதி' இரண்டாம் பாகத்தில் சரித்திர கதை | பிளாஷ்பேக் : காமெடி நாயகனாக விஜயகாந்த் நடித்த படம் | சிரிப்பு சத்தம், காமெடி பஞ்சத்தில் தவிக்கும் தமிழ் சினிமா | பிளாஷ்பேக் : உலகம் முழுக்க வெற்றி பெற்று தமிழில் தோற்ற கதை | ‛பெத்தி' பட பாடலுக்கு ஆயிரம் பேருடன் நடனமாடிய ராம்சரண் | தீபாவளி போட்டியில் டீசல் : ஆக்ஷன் ஹீரோவாக ஹரிஷ் கல்யாண் |
கொலை வழக்கில் சிறையில் அடைக்கப்பட்டுள்ள கன்னட சினிமாவின் முன்னணி நடிகரான தர்ஷன் பெங்களூரு பரப்பன அக்ரஹார சிறையில் சொகுசு வாழ்க்கை வாழ்வது தொடர்பான வீடியோக்கள், படங்கள் வெளியானது. இதை தொடர்ந்து 9 சிறைத்துறை அதிகாரிகள் தற்காலிக வேலை நீக்கம் செய்யப்பட்டுள்ளனர். இதுதொடர்பாக 3 வழக்குகள் பதிவாகி உள்ளது. இதனை விசாரிக்க 3 தனிப்படையும் அமைக்கப்பட்டுள்ளது.
இதற்கிடையே போலீஸ் கமிஷனர் தயானந்த் நேற்று பெங்களூரு பரப்பன அக்ரஹாரா சிறைக்கு சென்று திடீரென்று ஆய்வு மேற்கொண்டார். அப்போது அவர், சிறை விதிமுறை மீறல் குறித்து விசாரணை நடத்தினார். இதை தொடர்ந்து பரப்பன அக்ரஹாரா சிறையில் உள்ள தர்ஷனை வேறு சிறைக்கு மாற்ற அனுமதிக்க கோரி கோர்ட்டில் போலீசார் மனு தாக்கல் செய்தனர். இந்த மனுவை விசாரித்த நீதிபதி, ரேணுகாசாமி கொலையில் தொடர்புடைய தர்ஷன் உள்பட 10 பேரை வெவ்வேறு சிறைகளுக்கு மாற்ற அனுமதி வழங்கினார். தொடர்ந்து போலீசார் நடிகர் தர்ஷனை பல்லாரி சிறைக்கும் மற்றவர்ளை வேறு சிறைகளுக்கும் மாற்றினர்.