15வது திருமண நாளை கொண்டாடிய சிவகார்த்திகேயன் - ஆர்த்தி | குடும்பத்துடன் விநாயகர் சதுர்த்தி கொண்டாடிய சல்மான்கான் | ஹன்சிகாவின் விநாயகர் சதுர்த்தி கொண்டாட்டம் | டூரிஸ்ட் பேமிலி இயக்குனருக்கு ஜோடியான அனஸ்வரா ராஜன் | கோலி சோடா தொடர்ச்சி... புதிய பாகத்தின் தலைப்பு அறிவிப்பு | சமுத்திரக்கனி, கவுதம் மேனனின் ‛கார்மேனி செல்வம்' | ஷாலினி பிறந்தநாளுக்கு ரீ ரிலீஸ் ஆகும் ‛அமர்க்களம்' | ஷரிதா ராவ் நடிக்கும் புதிய படம் | நல்லகண்ணுவை சந்தித்து நலம் விசாரித்த சிவகார்த்திகேயன் | நிவேதா பெத்துராஜுக்கு திருமணம் |
சமீபத்தில் வெளியான ஹேமா கமிட்டி அறிக்கை மலையாள சினிமாவில் புயலை கிளப்பி உள்ளது. நடிகர் சங்க நிர்வாகிகள் மீதே பாலியல் புகார்கள் குவிந்து வருகிறது. இதனால் நடிகர் சங்க நிர்வாகிகள் மோகன்லால் உள்ளிட்ட அனைவரும் ராஜினாமா செய்திருக்கிறார்கள்.
இந்த நிலையில் நேற்று நடிகரும், மத்திய இணை அமைச்சருமான சுரேஷ் கோபியிடம் இதுகுறித்து பத்திரிகையாளர்கள் கேள்வி எழுப்பிய போது அவர் ஆவேசமாக பதிலளித்தார். அவர் கூறும்போது “ஹேமா கமிஷன் அறிக்கை மூலம் ஊடகங்களுக்கு தற்போது தீனி கிடைத்து உள்ளது. ஆனால், ஒரு விஷயத்தை நினைவில் கொள்ள வேண்டும். திட்டமிட்டு சினிமா என்ற மிகப்பெரிய இயக்கத்தை அழிக்க முயற்சி நடக்கிறது. நடிகைகள் அளித்துள்ள பாலியல் புகாருக்கான ஆதாரங்கள் என்ன?. புகார்கள் தற்போது குற்றச்சாட்டு வடிவில் உள்ளன. குற்றவாளிகள் யார் என்பதை நீதிமன்றம்தான் தீர்வு செய்யும்.
நான் தனிப்பட்ட நிகழ்ச்சியில் கலந்துகொள்ள இங்கு வந்தேன். மலையாள நடிகர் சங்க அலுவலகத்தில் இருந்து நான் வரும் போது, இந்த கேள்விகளை கேட்கலாம். இந்த விஷயத்தை ஊதி பெருதாக்கி நீங்கள் (மீடியா) பணம் சம்பாதிக்க நினைக்கிறீர்கள். எந்த இடத்தில் எந்த விஷயத்தை கேட்க வேண்டும் என்பதை தெரிந்து கொள்ளுங்கள். இவ்வாறு சுரேஷ் கோபி கூறினார்.