ஹீரோவாக மாறும் காமெடியன் ரவி மரியா: ஹீரோயின் தேடும் பணி தீவிரம் | ஜனநாயகன் முதல் காட்சி டிக்கெட் விலை எவ்வளவு : இதுதான் கோலிவுட்டில் ஹாட் டாக் | மோகன்லாலின் தாயார் சாந்தகுமாரி காலமானார் | சரஸ்வதி பட படப்பிடிப்பை நிறைவு செய்த வரலட்சுமி | ஊட்டுகுளங்கரா பகவதி கோவிலில் அஜித் வழிபாடு | கண்ணீரை வரவழைத்தது : சிறை படத்தை பாராட்டிய இயக்குனர் ஷங்கர் | வடமாநில இளைஞரை வெட்டிய போதை ஆசாமிகள் : மாரி செல்வராஜ் கடும் கண்டனம் | 2025 முதல் வெற்றி 'மதகஜராஜா': கடைசி வெற்றி 'சிறை' | தொழில் அதிபரிடம் ரூ.10 லட்சம் மோசடி : சொகுசு காருடன் மாயமான 'டிவி' நடிகை | சீரியல் நடிகை நந்தினி தற்கொலை |

ராமாயணம், மகாபாரதம் போன்ற புராணங்களை பாடலுடன் கதையாக சொல்கிறவர்கள் 'பாகவதர்' என்று அழைக்கப்பட்டார்கள். நடனம், தெருக்கூத்து, நாடகம், சினிமாவுக்கெல்லாம் முன்பு மக்களை மகிழ்ச்சி படுத்தியவர்கள் இந்த பாகவதர்கள்தான். தூய தமிழில் சொன்னால் 'கலை சொல்லிகள்'. பாகவதர்களாக ஆண்களே இருந்த காலத்தில் முதன் முதலாக வந்த பெண் சரஸ்வதி பாய்.
இவர் துணிச்சலுடன் ஆண்களுக்கு நிகராக கதை சொன்னார். அவருக்கு துணையாக அதாவது ஒத்து ஊதுகிறவராக அவரது சகோதரி ராதா பாய் இருந்தார். இருவரும் தமிழ்நாடு முழுக்க போகாத ஊர் இல்லை. கதை சொல்லாத கோவில் இல்லை. இதனால் சரஸ்வதி பாயை 'லேடி பாகவதர்' என்று அழைத்தார்கள்.
பாடலில் புகழ்பெற்றவர்கள் சினிமாவில் அறிமுகமாகி கொண்டிருந்தபோது பாகவதரான இவரையும் சினிமாவில் அறிமுகப்படுத்தினார்கள். 1934ம் ஆண்டு வெளிவந்த 'பாமா விஜயம்' படத்தில் சகோதிரிகள் இருவரும் அறிமுகமானார்கள். கிருஷ்ணரின் மனைவிகளான பாமா, ருக்மணியின் கதையாக இந்த படம் உருவானது. இதில் பாமாவாக ராதா பாயும், ருக்மணியாக சரஸ்வதி பாயும் நடித்தார்கள். இவர்களுடன் ஜி.என்.பாலசுப்ரமணியம் முக்கிய வேடத்தில் நடித்தார். கே.தியாகராஜ தீட்சிதர் இசை அமைத்தார். படத்தில் மொத்தம் 59 பாடல்கள் இடம் பெற்றிருந்தது. மாணிக் லால் தாண்டன் இயக்கி இருந்தார். இந்த படத்திற்கு பிறகு சரஸ்வதி சகோதரிகள் ஒரு சில படங்களில் நடித்ததாகவும், கடைசி காலத்தில் வறுமையில் வாழ்ந்ததாகவும் சொல்வார்கள்.