'கோட்' மோதிரத்துடன் வைரலாகும் விஜய் புகைப்படம்! | ஒரு வாரத்தில் 400 கோடி கடந்த 'தேவரா' வசூல் | விஜய் 69வது படத்தின் டெக்னீசியன்கள் பட்டியல் வெளியானது! | மனதை கல்லாக்கி அந்தக் காட்சிகளை நீக்கினேன் - பிரேம்குமார் | கட்சி பூஜையில் பங்கேற்காமல் கடைசி பட பூஜையில் பங்கேற்ற விஜய் | புறநானூறு படத்தில் சிவகார்த்திகேயனுடன் இணையும் அதர்வா! | 2024க்கான உலகின் மிகச்சிறந்த 25 ஹாரர் படங்களில் 2ம் இடம் பிடித்த பிரம்மயுகம் | போக்சோவில் கைதான ஜானிக்கு தேசிய விருது வழங்கப்படுமா? | ஒரே நாளில் விஜய்யின் இரண்டு 'பூஜைகள்' | வேட்டையன் படத்தின் இடைவேளையில் விடாமுயற்சி டீசரா? |
மாரி செல்வராஜ் இயக்கத்தில், சந்தோஷ் நாராயணன் இசையில், பொன்வேல், ராகுல், நிகிலா விமல் மற்றும் பலர் நடிப்பில் வாழை படம் கடந்த வாரம் வெளியானது. மாரி செல்வராஜ் அவரது மனைவி திவ்யா இருவரும் இணைந்து இப்படத்தைத் தயாரிக்க ஆரம்பித்தனர். 2022ம் ஆண்டு நவம்பர் மாதம் இப்படத்தின் படப்பிடிப்பு ஆரம்பமானது. கடந்த வருடக் கடைசியிலேயே படத்தின் படப்பிடிப்பை முடித்துவிட்டார்.
முதலில் டிஸ்னி பிளஸ் ஹாட்ஸ்டார் ஓடிடியில் இப்படத்தை நேரடியாக வெளியிடத்தான் படத்தை ஆரம்பித்தார்கள். அதன் பின் படத்தைத் தியேட்டர்களில் வெளியிட முடிவு செய்து கடந்த வாரம் வெளியிட்டார்கள். எதிர்பார்த்ததை விடவும் படத்திற்கு ரசிகர்களிடம் வரவேற்பு கிடைத்துள்ளது.
இப்படத்தின் சாட்டிலைட் உரிமை, ஓடிடி உரிமை ஆகியவற்றின் மதிப்பு மட்டும் 9 கோடி என்று தகவல். கடந்த நான்கு நாட்களில் தியேட்டர் வசூலாக 10 கோடிக்கும் மேல் வசூலித்துள்ளதாம்.
இப்படத்தின் முதல் சிங்கிள் வெளியீடு கடந்த மாதம் நடந்த போது, “வாழை' படத்தைத்தான் நான் முதலில் இயக்க வேண்டும் என்று நினைத்திருந்தேன். 50 லட்ச ரூபாய் இருந்தால் இப்படத்தை எடுத்துவிடலாம் சின்ன பட்ஜெட் படமாக எடுத்துவிடலாம் என நினைத்தேன். பின்னர் பொறுமையாக எடுக்கலாம் என தள்ளி வைத்து மூன்று படங்களை இயக்கிய பிறகு இப்படத்தை எடுத்தேன்,” என்று கூறியிருந்தார்.
இருந்தாலும் படத்தின் பட்ஜெட் 5 கோடி வரை இருக்கலாம் என்பது கோலிவுட் வட்டாரத் தகவல். அதைவிடக் குறைவாகவும் ஆகியிருக்கலாம். இருப்பினும் முதல் வார இறுதியிலேயே இப்படம் அதிக லாபத்தைக் கொடுத்துவிட்டது என்கிறார்கள்.